நஸ்ருதீன் ஷா நடிப்பில் அரவிந்த் கேஜ்ரிவாலை முன்வைத்து உருவான "டர்ட்டி பாலிடிக்ஸ்"!
மும்பை: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை முன்வைத்து 'டர்ட்டி பாலிடிக்ஸ்' என்ற பெயரில் நஸ்ருதீன் ஷா நடிக்கும் திரைப்படம் உருவாகியுள்ளது.
2013ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வரானார் அரவிந்த் கேஜ்ரிவால். 49 நாட்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நிலையில் தமது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்த் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் டெல்லி முதல்வராகியிருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால். தற்போது கேஜ்ரிவாலை முன்வைத்து டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் பொகாடியாவின் இந்த டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில் நஸ்ருதீன் ஷா, மல்லிகா ஷெராவத், ஜாக்கி ஷெரப், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ருதீன் ஷா, டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலைப் போன்ற பாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.. அந்த கதாபாத்திரமானது உரிமைகளுக்காக போராடி வெற்றி பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக இத்திரைப்படத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலையே நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதை அவர் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
