1 ரூபாய் சம்பளம் வாங்கிய ஐஏஎஸ்! சொத்து எவ்வளவு தெரியுமா? பணக்கார அரசு ஊழியர் இவர்தான்
சத்தீஸ்கர்: வெறும் 1 ரூபாயைச் சம்பளமாகப் பெற்றுக் கொண்ட ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இந்தியாவின் பணக்கார அரசு ஊழியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. யார் அவர்? அவரது சொத்து மதிப்பு என்ன?
தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் ஒரு ரூபாய் சம்பளம் என்றதும் உடனே நினைவுக்கு வருபவர் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாதான். அவர் முதல்வராகப் பதவியேற்ற போது ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். 'தான் முதலமைச்சர் பதவிக்காக வெறும் ஒரு ரூபாயை மட்டுமே சம்பளமாகப் பெற்றுக் கொள்ளப் போகிறேன்'என்று அறிவித்தார். அவர் ஆட்சி முடியும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. அடுத்த தேர்தல் வரும் போது திமுக ஒரு புயலைக் கிளப்பியது. வெறும் 1 ரூபாய் சம்பளம் பெற்ற இவரால் 5 ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக எப்படி சொத்து சேர்க்க முடிந்தது? என்று வழக்கைத் தொடர்ந்தது.

இப்படி ஆரம்பமானதுதான் ஜெயலலிதாவின் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு. அதற்காக அவர் கடைசியில் சிறைத் தண்டனை பெறும் அளவுக்குப் போனதற்கு 1 ரூபாய் சம்பளம் ஒரு காரணமாக இருந்தது. இந்நிலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனக்குச் சம்பளமாக 1 ரூபாயை மட்டுமே பெற்றுவந்துள்ளார். ஆனால், இந்திய ஐஏஎஸ் அதிகாரிகளில் அதிக சொத்துள்ளவராக இவர் அடையாளம் காணப்படுகிறார். யார் இவர்? ஏன் ஒரு ரூபாய் சம்பளம் பெற்றார்?
இந்த இந்தியாவின் பணக்கார ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் அமித் கட்டாரியா. இவர் பள்ளிப் படிப்பை டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள பப்ளிக் ஸ்கூலில் முடித்தார். பின்னர் டெல்லி ஐஐடியில் பி.டெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். படிப்பில் எப்போதும் கெட்டிக்கார மாணவராகவே திகழ்ந்துள்ளார் கட்டாரியா. இவரது பூர்வீகம் ஹரியானா மாநிலம் குருமிராம். ஆனால், இவர் அதிகாரியாக தற்போது சத்தீஸ்கரில் பணியாற்றி வருகிறார்.
முன்னதாக ஊரக வளர்ச்சித் துறையில் இணைச் செயலாளராகப் பணியாற்றிய இவர் சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். கடந்த 2015 ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் பஸ்தார் கலெக்டராக இவர் இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப்பயணத்தின் போது அவரை வரவேற்கும் நிகழ்ச்சியின் போது சன்கிளாஸ் இவர் அணிந்திருந்தத்ஹு தலைப்புச் செய்தியாக மாறியது. அதற்காக மாநில அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன் மூலம் பேசு பொருளாக மாறினார் இந்த அதிகாரி.
இப்போது இந்தியாவின் பணக்கார ஐஏஎஸ் அதிகாரி என்று புகழுடன் மீண்டும் டிரெண்டிங்க் ஆகியுள்ளார். அதுவும் ஒரு ரூபாய் சம்பளம் பெற்ற இந்த அதிகாரி பணக்கார அரசு ஊழியர் பட்டியலில் இடம்பெற்றதுதான் ஆச்சரியம்.
அமித் கட்டாரியா அரசு ஊழியர் சம்பளத்தின் மூலம் பணக்காரர் ஆகவில்லை. அவரது குடும்பம் ரியஸ் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறக்கிறது. அதன் மூலம் நிறைய வருமானம் கிடைத்து வருவதால்தான் அவர் அரசு சம்பளமாக 1 ரூபாய் பெற்றுக் கொள்ளும் முடிவை எடுத்தார். இவரது மனைவி அஸ்மிதா ஹண்டா ஒரு கமர்ஷியன் விமானியாக பணிபுரிந்தவர். அதன் மூலம் லட்சக் கணக்கான ரூபாயைச் சம்பளமாகப் பெற்றவர்.

இதனால் இந்த அதிகாரியின் குடும்பம் சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலம். அவர் இன்ஸ்டாகிராமில் தனது பயணம், குடும்பம் தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டே உள்ளார். ஆக, வடமாநில நெட்டிசன்களுக்கு இவர் அதிக பரிட்சியமானவர். டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் படி இந்த ஐஏஎஸ் அதிகாரியின் நிகர சொத்து மதிப்பு ₹8.90 கோடி. இதனால் அவர் இந்தியாவின் பணக்கார ஐஏஎஸ் அதிகாரியாக மாறியுள்ளார்.
இந்த அதிகாரி தேசத்திற்குத் தனது பங்களிப்பை ஏதேனும் ஒருவகையில் செலுத்த வேண்டும் என விரும்பியதால்தான் சிவில் சேவையில் சேர்ந்தார். ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவுடன் வெறும் 1 ரூபாயை மாதச் சம்பளத்தைச் சேவை அடிப்படையில் பெற்றுக் கொண்டார். அதனால் இப்போது அவர் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications