ஷாக்கிங்.. பிரபல மலையாள பாடகி மஞ்சுஷா மோகன்தாஸ் சாலை விபத்தில் பலி!
மலையாள பாடகி மஞ்சுஷா மோகன்தாஸ் உயிரிழந்தார்.
Recommended Video

கேரளா: பிரபல மலையாள பாடகியும், நடிகையுமான மஞ்சுஷா மோகன்தாஸ் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பிரபல மலையாள சேனல் ஒன்றில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் மஞ்சுஷா மோகன்தாஸ். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார். அதன் காரணமாக இவருக்கு படத்தில் பாடக்கூடிய வாய்ப்புகள் நிறைய தேடி வந்தன.

அந்த பாடல்கள் ரசிகர்களிடம் இவரை கொண்டுபோய் சேர்த்து மேலும் பிரபலமாக்கியது. மேலும் ஒரு சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதனால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே கேரளாவில் உள்ளனர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் தனது தோழி அஞ்சனா என்பவருடன் மஞ்சுஷா மோகன்தாஸ் பைக்கில் சென்றார். அப்போது எதிரே வந்த வேன் ஒன்று இவர்கள் சென்ற பைக் மீது எதிர்பாராத விதமாக பலமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் கடுமையாக காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒரு வாரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதில் தோழி அஞ்சனா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் சிகிச்சை பலனின்றி மஞ்சுஷா மோகன்தாஸ் உயிரிழந்தார். இதனால் கேரள திரையுலகமும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இளம் வயதிலேயே உயிரிழந்துள்ள மஞ்சுஷாவின் மரண செய்தி கேள்வியுற்று பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications