For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடு முழுவதும் மதுவிலக்கு வந்தால்.. அடப்பாவிகளா!.. இப்படிலாம் ஓட்ரீங்களேப்பா! #IfAlcoholWereBanned

மதுவிலக்கு கொண்டு வந்தால் இந்த நாடு என்னவாகும் என்பது குறித்து டுவிட்டரில் ஹேஸ்டேக் ஒன்றை உருவாக்கி உள்ளனர். டெல்லி: நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் மது இல்லாமல் இந்த நாடு எப்படி இருக்கும் என

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் மது இல்லாமல் இந்த நாடு எப்படி இருக்கும் என்பது குறித்து டுவிட்டரில் பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை முதல்வர் நிதீஷ்குமார் அமல்படுத்தினார். அத்துடன் அதை தயாரிக்கும் ஆலைகளையும் தடை செய்தார். இந்நிலையில் நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்
என்று அவர் நேற்று பேசியுள்ளார்.

இதை கேட்ட நெட்டிசன்கள் மது இல்லாத நாடு எப்படி இருக்கும் என்பதை பற்றி ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அவற்றில் இருந்து சில உங்களுக்காக....

நோ மேரேஜ்

நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினால் பஞ்சாபியர்கள் திருமணம் செய்து கொள்வதை நிறுத்திவிடுவார்கள் என்கிறார் இந்த வலைஞர்.

நஜின் டேன்ஸ் அழியும்

மதுவிலக்கு கொண்டு வந்தால் திருமண விழாக்களில் நடத்தப்படும் பாரம்பரியமான பழமையான இந்திய நஜின் டேன்ஸ் அழிந்துவிடும் என்கிறார் இந்த வலைஞர்.

தண்ணீர் நிறுவனம்

கின்லே வாட்டர் தனித்துவிடப்படும்.

கோவா போர்

Goa would just be a boring three letter word.

கோவா என்ற மூன்றெழுத்து வார்த்தை போர் அடித்துவிடும்.

பணமதிப்பிழப்பு போல்...

இந்த ஹேஷ்டேக் பணமதிப்பிழப்பை போல் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு

நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தினால் வன்முறை குறையும், குற்றங்கள் குறையும், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும், வேலையின்மை குறையும், குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும், சமூகமும் சந்தோஷமாக இருக்கும் என்கிறார் இந்த வலைஞர்.

ஒட்டுமொத்தமாக குழிக்குள்

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் எல்லா ஆண்களும் ஓடிபோய் ஒரு பெரிய குழிக்குள் விழ வேண்டியதுதான்.

English summary
If alcohol were banned hashtag is trending in twitter, users imagines without liquor and send comments how the nation will be without liquor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X