பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபட்டால் நடவடிக்கை.. மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்தவர்கள் மீதும், மாடுகளை இறைச்சிக்காக வெட்ட வாகனங்களில் அடைத்து செல்பவர்கள் மீது பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

If engaged in violence in the name of cow protectors will be punished, says Modi

கண்மூடித்தனமாக தாக்கியதால் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி வன்முறை தீர்வாகாது என்ற அவ்வப்போது தெரிவித்து வருகின்றார்.

எனினும் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய மோடி, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Narendra Modi warns that violence in the name of cow protectors will not be barred, they will be punished severely.
Please Wait while comments are loading...