தேவ கௌடா கிங்கும் அல்ல கிங் மேக்கரும் அல்ல... கருத்து கணிப்புகள் புஸ்வானமானது

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மதசார்பற்ற ஜனதா தளம் 35 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் காங்கிரஸ், பாஜகவின் குடுமி அதன் கையில் இருக்கும் என்ற கருத்து கணிப்புகள் பொய்த்துவிட்டு பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. இதை தொடர்ந்து குமாரசாமியின் மஜத கட்சி 26 இடங்களில் முன்னிலை வகித்து வந்தது.

35 இடங்கள் கன்பார்ம்

35 இடங்கள் கன்பார்ம்

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலும், பிந்தைய கருத்து கணிப்புகளிலும் தொங்கு சட்டசபை அமையும் என்றும் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காது என்றும் கணிக்கப்பட்டன. அதுபோல் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 40 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது.

என்னவாகும் நிலவரம்

என்னவாகும் நிலவரம்

மதசார்பற்ற ஜனதா தளம் 35 இடங்களில் வெற்றி பெற்றால் அக்கட்சி யாருடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவிக்கிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. நேற்றைய தினம் மஜதவின் நிலை குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் பாஜகவுக்கு ஆதரவு தரமாட்டோம் என்று கூறியுள்ளார். அதே போல் காங்கிரஸுக்கு ஆதரவு உண்டு, ஆனால் முதல்வர் சித்தராமையாவாக இருக்கக் கூடாது என்பதே இவர்களது கோரிக்கையாகும்.

குமாரசாமி கை காட்டும் நபர்

குமாரசாமி கை காட்டும் நபர்

மதச்சார்பற்ற ஜனதாதளம் 30 தொகுதிகளுக்கு மேல் லீடிங்கில் இருந்தது. இதனால் கெளடா கட்சியைத் தவிர்த்து விட்டு யாராலும் ஆட்சியமைக்கவே முடியாத நிலை உருவாகியிருந்தது. எனவே தேவெ கெளடா மற்றும் குமாரசாமி கை காட்டும் நபர்தான் முதல்வராக முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வந்தனர்.

புஷ்வானமாகும் கணிப்புகள்

புஷ்வானமாகும் கணிப்புகள்

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க 112 இருந்தால் போதுமானது. அதன்படி பாஜக 119 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும். இதனால் தேவ கௌடா கிங்கும் அல்லாமல் கிங் மேக்கரும் ஆக முடியாமல் உள்ளார் என்பதே நிதர்சனம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If JDS marks 35 more places, then it will be the Kingmaker. It will be the deciding factor too.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற