For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாஸ் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கம்.. வானிலை மையம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

புவனேஸ்வரம்: யாஸ் புயல் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் யாஸ் புயல் நேற்று முன் தினம் உருவானது. இந்த ஆண்டின் 2ஆவது புயல், வங்கக் கடலில் உருவான முதல் புயல் என்பதால் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் இன்று மதியம் தம்ரா துறைமுகத்திற்கும் பாலசோருக்கும் இடையே கரையை கடக்கிறது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறியதால் மேற்கு வங்கம், ஒடிஸாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

ஒடிஸாவின் பாரதீப்- சாகர் தீவுக்கு அருகே இன்று மதியம் கரையை கடக்கும் யாஸ் புயல்! ஒடிஸாவின் பாரதீப்- சாகர் தீவுக்கு அருகே இன்று மதியம் கரையை கடக்கும் யாஸ் புயல்!

எதிர்கொள்ள

எதிர்கொள்ள

இந்த புயலை எதிர்கொள்ள இரு மாநில அரசுகளும் தயார் நிலையில் உள்ளன. கிழக்கு கடலோர பகுதிகளை கடுமையாக இந்த புயல் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அது போல் காற்றின் வேகமும் மணிக்கு 185 கி.மீ. இருக்கும். இந்த புயல் மேற்கு வங்கத்தை கடக்கிறது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

இதுகுறித்து இந்திய வானிலை மையம் இயக்குநர் சஞ்சீவ் பானர்ஜி கூறுகையில் மேற்கு வங்கம், ஒடிஸாவில் மரங்கள் வேரோடு சாயும். மின் கம்பங்களும் முறிந்து விழும். காற்றின் வேகத்தில் எதிரே இருப்பது தெரியாத அளவுக்கு இருக்கும். கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும்.

மீனவர்கள்

மீனவர்கள்

கடலோரம் வசிக்கும் மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். சந்த்பாலி மாவட்டம் இந்த புயலால் கடுமையாக பாதிக்கக் கூடும் என தெரிகிறது என்றார். ஆம்பன் புயலை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடும் சேதம்

கடும் சேதம்

மேற்கு வங்கத்தில் 20 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்படும். ஹவுரா, ஹூக்லி, பங்குரா, பிர்பும், நடியா, பச்சிம், முர்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்கள் புயலால் பாதிப்படையும். இதுவரை 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு தாழ்வான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

English summary
Cyclone Yaas impact will be 6 hours before and after landfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X