சிறை விதிமுறைகளை மீறி 117 நாட்களில், 82 விசிட்டர்களை சந்தித்த சசிகலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சசிகலா கடந்த, 117 நாட்களில், 82 பார்வையாளர்கள், 32 முறை சசிகலாவை பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறைத்துறை விதிகளின்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை தான் கைதியை பார்க்க முடியும். ஆனால், சசிகலாவை பார்வையாளர்கள் ஒரே வாரத்தில் பல முறை பார்த்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில்
கைதி எண் 9234 கொண்ட சசிகலா சிறை விதிகளை மீறி அளவுக்கு அதிகமான விசிட்டர்களை சந்தித்திருக்கிறார் என்று டி.ஐ.ஜி. ரூபா, தனது மேலதிகாரிகளுக்கு எழுதினார். சசிகலா சிறை விதிகளை மீறினார் என்பதற்கு வலுவான ஆதாரம் சிக்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம்

பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, கடந்த, 117 நாட்களில், 82 பார்வையாளர்கள், 32 முறை சசிகலாவை பார்த்துள்ளனர்.

பலமுறை சந்திப்பு

பலமுறை சந்திப்பு

சிறைத்துறை விதிகளின்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை தான் கைதியை பார்க்க முடியும். ஆனால், சசிகலாவை பார்வையாளர்கள் ஒரே வாரத்தில் பல முறை பார்த்துள்ளனர்.

இரவிலும் அனுமதி

இரவிலும் அனுமதி

மேலும்காலை, 11 மணி முதல், 5 மணி வரை தான் கைதிகளை பார்க்க முடியும் என்ற நடைமுறை உள்ளது. . ஆனால், சசிகலாவை இரவிலும் பார்வையாளர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விதிமீறல்

விதிமீறல்

சட்டப்படி சசிகலா எட்டு விசிட்டர்களை மட்டுமே சந்தித்திருக்க வேண்டும். ஆனால், அவர் 82 விசிட்டர்களைச் சந்தித்திருப்பது அப்பட்டமான சட்டமீறல். அதாவது சட்டம் அனுமதித்த அளவை மீறி பத்து மடங்கு பார்வையாளர்களைச் சந்தித்திருக்கிறார் சசிகலா.

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

சசிகலா சிறைக்குச் சென்ற கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி முதல் மொத்தம் அவர் 13 நாள்கள்தான் சிறையில் இருந்திருக்கிறார். அந்த 13 நாள்களுக்குள்ளேயே அவர் ஏழு முறை பார்வையாளர்களைச் சந்தித்திருக்கிறார் என்று தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெறப்பட்ட ஆவணங்களை சசிகலாவுக்கு எதிராக அடுக்குகிறார் நரசிம்ம மூர்த்தி.

வேறு சிறைக்கு மாற்ற மனு

வேறு சிறைக்கு மாற்ற மனு

இந்த ஆவணங்களை மேற்கோள்காட்டி சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் நேற்று ஜூலை 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு மனு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், சிறைக்குள் பல்வேறு விதிமீறல்களை நடத்திய சசிகலாவை பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து மாற்ற வேண்டும். நேர்மையான அதிகாரிகளை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும். சிறைத்துறையில் இருக்கும் ஊழல் அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அறைக்குள் சென்றது அம்பலம்

அறைக்குள் சென்றது அம்பலம்

சசிகலாவை சந்திக்க சென்ற பார்வையாளர்கள், நேரடியாக அவரது அறை வரை சென்று வந்துள்ளனர். இதற்கு அனுமதி கொடுக்கவும் சிறைத்துறையினர் லஞ்சம் பெற்றதாக சந்தேகம் எழுந்துள்ளது. சசிகலா விஷயத்தில் சிறையில் மேலும் பல திடுக்கிடும் விதிமீறல்கள் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala has the luxury of meeting her relatives and supporters, like no other prison inmates perhaps have. In the last 117 days, 82 persons have come to meet 'Chinnamma' in 32 times!
Please Wait while comments are loading...