Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளுக்கு 2வது திருமணம்! மாமனாரின் மூக்கு காதுகளை அறுத்த குடும்பத்தினர்.. ராஜஸ்தானில் பயங்கர தண்டனை

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: மகளுக்கு 2வது திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த மருமகன் தனது உறவினர்கள் மூலம் மாமனாரின் மூக்கு, காதுகளை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் சோந்தி கிராமத்தை சேர்ந்தவர் சுக்ராம் விஷ்னோய் (55). இவர் வழக்கம்போல் இரவில் தனது வீட்டில் இருந்தார்.

அப்போது திடீரென்று ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் நுழைந்தது. இதனால் சுக்ராம் விஷ்னோய் அதிர்ச்சியடைந்தார்.

மூக்கு-காது அறுப்பு

மூக்கு-காது அறுப்பு

இதற்கிடையே அந்த கும்பல் சுக்ராம் விஷ்னோயை சரமாரியாக தாக்கியது. மேலும் கத்தியை எடுத்த குடும்பல் அவரது மூக்கு மற்றும் காதை அறுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியே ஓடி அந்த கும்பல் தலைமறைவானது. இதற்கிடையே ரத்தம் சிந்த சிந்த சுக்ராம் விஷ்னோய் அலறி துடித்தார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சுக்ராம் விஷ்னோய் மீதான தாக்குதல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

மகளுக்கு 2வது திருமணம்

மகளுக்கு 2வது திருமணம்

இந்த விசாரணையின்போது தன்மீது மகளின் முன்னாள் கணவரின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதாக சுக்ராம் விஷ்னோய் குற்றம்சாட்டியுள்ளார். அதாவது அவரது மகளுக்கும் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. மகளிடம் அதிகளவில் வரதட்சனை கேட்டு அந்த நபர் துன்புறுத்தியுள்ளார். இதனால் அவரது மகள் கணவரை பிரிந்து சுக்ராம் விஷ்னோயுடன் வசித்து வந்தார். இப்படி 3 ஆண்டு காலம் கடந்த நிலையில் சமீபத்தில் அவரது மகளுக்கு இன்னொரு நபருடன் திருமணம் நடந்தது.

முதல் கணவரை தேடும் போலீஸ்

முதல் கணவரை தேடும் போலீஸ்

2வது திருமணம் பற்றி அறிந்த நிலையில் மகளின் முன்னாள் கணவரின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக சுக்ராம் விஷ்னோய் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சுக்ராம் விஷ்னோயின் முதல் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+