For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடுதலாக வீரர், வீராங்கனைகளை சேர்க்கும் இந்திய கடற்படை அகாடமி

By Siva
Google Oneindia Tamil News

எழிமலா: கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள எழிமலாவில் இருக்கும் இந்திய கடற்படை அகாடமியில் கூடுதலாக வீரர், வீராங்கனைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எழிமலாவில் அண்மையில் நடந்த வீரர், வீராங்கனைகள் தேர்ச்சி பெற்று வெளியே செல்லும் விழாவில் கலந்து கொண்ட துணை அட்மிரல் அஜீத் குமார் ஒன் இந்தியாவிடம் கூறுகையில்,

INA to augment intake of cadets in Phase-II expansion plans

எழிமலா அகாடமியில் கூடுதலாக வீரர், வீராங்கனைகளை சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஃபேஸ் 2 எனப்படும் இந்த பணிகள் 2017ம் ஆண்டு நிறைவடையும். அதன் பிறகு அகாடமியில் சேர்க்கப்படும் வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கை 1,500ஐ தாண்டும். ஃபேஸ் 3 பணிகள் மேற்கொள்ளப்பட்டால் 2 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்படுவார்கள்.

அகாடமியில் வருங்காலத்தில் ஆய்வகங்களை அமைக்க ஐஐடிகளின் உதவி நாடப்படும். அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் அகாடமியில் பயிற்சி பெறுவோர் சிறப்பாக பயில சிறந்த பயிற்சி முறைகளை பின்பற்றுகிறோம். இந்திய கடற்படை அகாடமியில் பயின்றவர்கள் பணியிலும், வாழ்விலும் சிறந்து விளங்குகிறார்கள்.

ஐஐடிகள், ஐஐஎம்கள் உள்ளிட்ட இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. நாட்டிலேயே சிறந்த அகாடமியாக விளங்குவதே எங்களின் குறிக்கோள் என்றார்.

English summary
The Indian Naval Academy (INA), one of the top-notch training wings of Indian Navy situated in Ezhimala(Kannur district, Kerala), is pacing ahead to augment its intake of cadets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X