அமெரிக்காவின் "ஜாவ்லின்"... "த்ரோ"... இஸ்ரேலின் "ஸ்பைக்"குக்கு ஓ.கே. சொன்ன இந்தியா!
டெல்லி: அமெரிக்காவின் ஜாவ்லின் ஏவுகணையை இந்தியா நிராகரித்துள்ளது. அதற்குப் பதில் இஸ்ரேலின் ஸ்பைக் ஏவுகணைகளை அது வாங்கப் போகிறது.
மொத்தம் 8000 ஸ்பைக் ஏவுகணைகளை இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளதாம். இந்தியாவின் இந்த முடிவால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.
காரணம், ஜாவ்லின் ஏவுகணைகளை இந்தியாவின் தலையில் கட்ட கடுமையாக முட்டி மோதி வந்தது அமெரிக்கா. ஆனால் இந்தியாவை ஜாவ்லினை "த்ரோ" செய்து விட்டு ஸ்பைக்குக்கு மாறி விட்டது.

12 டோர்னியர் விமானங்களும்
மேலும் 12 டோர்னியர் ரக விமானங்களையும் இந்தியா வாங்கவுள்ளது. இது கடற்படைக்காக வாங்கப்படவுள்ளது.

362 இன்பேன்டரி கம்பேட் வாகனங்கள்
அதேபோல 362 இன்பேன்டரி கம்பேட் வாகனங்களையும் இந்தியா, இஸ்ரேலிடமிருந்து இறக்குமதி செய்கிறது.

அடேங்கப்பா அமவுன்ட்!
மொத்தம் ரூ. 3200 கோடி செலவில் இந்த ஏவுகணை உள்ளிட்டவற்றையும், கூடவே 300க்கும் மேற்பட்ட லாஞ்சர்களையும் இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளது.

பாதுகாப்புத்துறை ஒப்புதல்
இந்த வணிகத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறையின் ஆயுதக் கொள்முதல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

ஜஸ்ட் ரூ. 52,000 கோடியில்
இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை ரூ. 52,000 கோடி மதிப்பில் இந்தியா கட்டவுள்ளது.

ஆயுதங்களை வாங்கிக் குவிக்க மோடி உத்தரவு
மோடி அரசு ஆயுதக் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள், பேச்சுக்கள், கொள்முதல்கள், ஆர்டர்கள் உள்ளிட்டவற்றை தேக்கம் இல்லாமல் விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த விரைவான நடவடிக்கையில் பாதுகாப்புத்துறை இறங்கியுள்ளது.

ஜாவ்லினை விட ஸ்பைக் ஒஸ்தியா...!
கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே மாதிரியான ஏவுகணைகள்தான். ஆனால் இஸ்ரேல் ஏவுகணை சற்று செலவு கம்மியானது. அதேசமயம் அமெரிக்க ஏவுகணையின் செலவு ஜாஸ்தியாகும்.

அட்டகாசமான ஏவுகணை
ஸ்பைக் ஏவுகணையானது, டாங்குகளை குறி வைத்துத் தாக்கக் கூடிய ஏவுகணையாகும். இலக்குகளை மிகத் துல்லியமாக குறி பார்த்துச் சுடக் கூடிய வல்லமை படைத்தது. இதை இஸ்ரேலின் ரபேல் அட்வான்ஸ்ட் பாதுகாப்பு சிஸ்டம்ஸ் அமைப்பு தயாரிக்கிறது.

தோள்பட்டையில் வைத்துத் தூக்கிச் செல்லலாம்
ஆபீஸுக்குப் போகும்போது பேக் எடுத்துக் கொண்டு போவது போல இந்த ஏவுகணையையும் அப்படியே தோள்பட்டையில் சுமந்தபடி சென்று, உட்கார்ந்து நிறுத்தி நிதானமாக எதிரிகளின் இலக்கைக் குறி பார்த்து ஏவுகணையை ஏவலாம் என்பது இதன் விசேஷமாகும். மொத்தத்தில் ரொம்பச் சவுகரியமாக டாங்குகளைக் குறி வைத்துத் தாக்கக் கூடிய வசதி படைத்தது இது.

ஜாவ்லின்
ஜாவ்லின் ஏவுகணையை அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் நிறுவனமும், ரேய்தியான் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

லேட்டாக வந்ததால்
உண்மையில் இஸ்ரேல் நிறுவனம்தான் முதலில் விருப்பத்தைத் தெரிவித்திருந்தது. கடைசி நேரத்தில்தான் அமெரிக்கா வந்து சேர்ந்தது. ஆனால் அதற்குள்ளாகவே இஸ்ரேல் நிறுவனத்துடன், இந்தியா, பரிசோதனை, தொழில்நுட்பப் பரிமாற்றம், செலவு உள்ளிட்டவை குறித்து விவாதித்து முடித்து விட்டது. எனவே அமெரிக்காவின் ஜாவ்லினுக்கு இடமில்லாமல் போய் விட்டது.

இணைந்து தயாரிக்க முன்வந்த அமெரிக்கா
அதேசமயம், ஜாவ்லின் ஏவுகணையை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்கவும், மேம்படுத்தவும் அமெரிக்கா முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

3 காரணங்களுக்காக.. ஸாரி!
இருப்பினும் 3 காரணங்களுக்காக ஜாவ்லினை இந்தியா நிராகரித்ததாக கூறப்படுகிறது. அதாவது தொழில்நுட்பத்தை முழுமையாக இந்தியாவின் பாரத் டைனமிக் நிறுவனத்திடம் தர அமெரிக்கா மறுத்து விட்டது. 2வது, அமெரிக்க ஏவுகணையை விட இஸ்ரேல் ஏவுகணையின் விலை அதிகம் என்பது. 3வது கடைசி நேரத்தில் இஸ்ரேல் டீலிங்கை ரத்து செய்தால், இஸ்ரேலைப் பகைத்துக் கொள்ள நேரிடுமோ என்ற இந்தியாவின் அச்சம்.

வாங்கிக் குவிப்பதில் நாமதான் பர்ஸ்ட்!
உலகிலேயே அதிக அளவில் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாடு இந்தியாதான். எனவே இந்தியாவின் இந்த இஸ்ரேல் ஆயுதக் கொள்முதல் ஆச்சரியமானதல்ல.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications