இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்து மல்ஹோத்ரா இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ஆவார். கடந்த 35 வருடங்களாக இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்தியாவின் முக்கிய வழக்கறிஞர்கள் பலரிடம் இவர் ஜூனியராக இருந்துள்ளார்.

India's first woman advocate becomes SC Judge

அதேபோல் சில முக்கியமான வழக்குகளில் இவர் ஆஜராகி இருக்கிறார். இந்து மல்ஹோத்ரா கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஆவார்.

பல்வேறு உயர்நீதி மன்றங்களில் இவர் நீதிபதியாக பணியாற்றி இருக்கிறார். இந்த அனுபவத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்ற கொலீஜியம் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கொலீஜியம் இவரை பரிந்துரை செய்து இருக்கிறது. இந்த பரிந்துரை தற்போது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு இதுகுறித்து முடிவெடுக்கும்.

இவர் பதவியேற்கும் பட்சத்தில் இன்னும் 4 ஆண்டுகள் இவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India's first woman advocate Indu Malhotra becomes Supreme Court Judge . Indu Malhotra is from Bengaluru. She has 35 years of experience. She has worked as student for many famous advocates.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற