For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்கட்சிகளின் கூட்டணி ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்குமா? இந்தியா டுடே பரபரப்பு சர்வே

பாஜக அல்லாத எதிர்கட்சிகளின் கூட்டணி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக அல்லாத எதிர்கட்சிகளின் கூட்டணி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் அமைப்பு இணைந்து இந்தியா முழுக்க சர்வே நடத்தியது. இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

பல முக்கியமான விஷயங்கள் குறித்து இதில் மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்குமா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கான பதில்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவராக

காங்கிரஸ் தலைவராக

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் ராகுல் காந்தி சிறப்பாக செயல்படுவாரா, எதிர்கட்சிகளுடன் இணக்கமாக இருப்பாரா, தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துவாரா என்ற கேள்விக்கு 47% மக்கள் சாதகமாக பதில் அளித்துள்ளனர். 36%சதவிகித மக்கள் எதிராக பதில் அளித்துள்ளார். 17 % சதவிகித மக்கள் தேர்தலில் போது தெரியும் என்றுள்ளனர்.

எத்தனை இடம்

எத்தனை இடம்

மேலும் இதில் காங்கிரஸ் கட்சி எல்லா எதிர்கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் குறைவான இடங்களில் மட்டுமே போட்டியிடும். 250க்கும் குறைவான இடங்களிலேயே காங்கிரஸ் கூட்டணி வைத்தால் போட்டியிடும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்குமா

ஏற்குமா

46% எதிர்க்கட்சிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயார் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. 35% எதிர்க்கட்சிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கட்சிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளது.

கடைசியில் முடிவு

கடைசியில் முடிவு

19% எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. சில முக்கிய கட்சிகள் இந்த பதிலை அளித்துள்ளதாம். இந்த கூட்டணியில் ராகுலுக்கு போட்டியாக, சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள்.

English summary
Anti-BJP alliance accepts Rahul Gandhi as PM candidate says India Today- Karvy Insights survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X