For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக்ரா அருகே நடு ரோட்டில் இறங்கிய போர் விமானம்.. "ஜாம்" ஆன டிராபிக்!

By Siva
Google Oneindia Tamil News

மதுரா: நொய்டாவை ஆக்ராவுடன் இணைக்கும் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் மிராஜ் 2000 போர் விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக இன்று காலை தரையிறக்கியுள்ளது.

நொய்டாவை ஆக்ராவுடன் இணைக்கும் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் மிராஜ் 2000 போர் விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக இன்று காலை தரையிறக்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி மதுராவில் வரும் 25ம் தேதி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

யமுனா எஸ்க்பிரஸ்வே சாலையில் போர் விமானம் ஒன்று திடீர் என தரையிறங்கி ஒரு நிமிடம் நின்றதால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவசர நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க முடியுமா என்பதை சோதனை செய்யவே போர் விமானத்தை தரையிறக்கியதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படை பிரான்சிடம் இருந்து 2 மேம்படுத்தப்பட்ட மிராஜ் 2000 போர் விமானங்களை வாங்கியது. இது தொடர்பாக இந்தியா-பிரான்ஸ் இடையே ரூ.10 ஆயிரம் கோடிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. முன்னதாக 1980களில் இந்திய விமானப்படைக்கு 49 மிராஜ் 2000 போர் விமானங்கள் வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
IAF fighter jet Mirage 2000 has been successfully landed on Yamuna expressway on thursday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X