1962 யுத்தத்தில் சீனாவை ஆதரித்த இடதுசாரிகள்- இரண்டாக உடைந்த கம்யூனிஸ்ட் கட்சி- ப்ளாஷ்பேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனாவுடனான 1962-ம் ஆண்டு யுத்தம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியையே இரண்டாக உடைத்தது என்பது வரலாறு.

1962-ல் நமது நாட்டின் எல்லைப் பகுதிகளில் திடீரென சீனா தாக்குதல் நடத்தி முன்னேறியது. இதை சற்றும் எதிர்பார்க்காத ராணுவம் பின்வாங்க தொடங்கியது.

கொல்கத்தா நோக்கி

கொல்கத்தா நோக்கி

வடகிழக்கில் கொல்கத்தாவை நோக்கி சீனா முன்னேறியது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒன்றுபட்ட அமைப்புதான் இருந்தது.

அரசுக்கு ஆதரவு

அரசுக்கு ஆதரவு

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் பலர் மத்திய காங்கிரஸ் அரசுடன் இணைந்து சீனாவின் யுத்தத்தை எதிர்த்தனர். இவர்கள் வலதுசாரிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.

சிறையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள்

சிறையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள்

சீனாவை ஆதரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இடது கம்யூனிஸ்டுகள் எனவும் குறிப்பிடப்பட்டனர்.

சிபிஎம் உதயம்

சிபிஎம் உதயம்

இடது கம்யூனிஸ்டுகள் இணைந்து உருவாக்கியதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அதாவது இன்றைய சிபிஎம் கட்சி. இதன் தாய் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்றளவும் மூத்த தலைவர்களால் வலது கம்யூனிஸ்ட் என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
During 1962 Indo-Sino war, Communist Party of India was deeply divided.
Please Wait while comments are loading...