Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகத்தால் கின்னஸ் சாதனை புரிந்த இந்தியர்: 66 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சென்று நகத்தை வெட்டினார்!

புனேவில் நகத்தால் கின்னஸ் சாதனை புரிந்தவர் 66 ஆண்டுகளுக்கு பிறகு தனது நகத்தை வெட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நகத்தால் கின்னஸ் சாதனை புரிந்த இந்தியர் நகத்தை வெட்டினார்!- வீடியோ

    புனே: நகத்தால் கின்னஸ் சாதனை புரிந்த ஸ்ரீதர் சில்லால் 66 ஆண்டுகளுக்கு பிறகு தனது நகத்தை வெட்டியுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். 88 வயதான சில்லால் கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.

    இதனால் கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் நகங்கள் மிக நீளமாக வளர்ச்சி அடைந்துள்ளன. நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 சென்டிமீட்டர்களாக உள்ளது.

    நகத்தால் கின்னஸ் சாதனை

    நகத்தால் கின்னஸ் சாதனை

    இதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 சென்டிமீட்டர் ஆகும். உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.

    பிலிவ் இட் ஆர் நாட்

    பிலிவ் இட் ஆர் நாட்

    வயது முதிர்வால் அவதிப்படும் சில்லால் அண்மையில் தனது நகத்தை வெட்ட முடிவு செய்தார்.இதைத்தொடர்ந்து 66 ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த நகத்தை வெட்டிய பிறகு பொக்கிஷமாக வைக்க ஆசைப்பட்ட அவர், அமெரிக்காவின் பிரபலமான ரிப்லே'ஸ் பிலிவ் இட் ஆர் நாட் என்னும் அருங்காட்சியகத்தில் வைக்கும் அனுமதியை பெற்றார்.

    வெட்டப்பட்ட நகங்கள்

    வெட்டப்பட்ட நகங்கள்

    இதைத்தொடர்ந்து சில்லால் அமெரிக்கா சென்றார். சில்லாலின் நகம் வெட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிரத்தியேக கருவியின் மூலம் 66 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட ஸ்ரீதர் சில்லாலின் மிக நீண்ட நகங்கள் வெட்டப்பட்டன.

    ஏராளமானோர் பார்த்து ரசிப்பு

    ஏராளமானோர் பார்த்து ரசிப்பு

    யூட்யூப் இணையதளத்தில் நேற்று வெளியான சில்லாலின் நகம் வெட்டும் நிகழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை இது வரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ஷேர் செய்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+