For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திரா காந்தி 100வது பிறந்தநாள்:டெல்லி நினைவிடத்தில் பிரணாப், மன்மோகன்சிங், ராகுல் மலர்தூவி அஞ்சலி

இன்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூறாவது பிறந்தநாள் விழாவினையொட்டி பல்வேறு தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் நூறாவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகள் ஆவார்.

Indian Leaders Respecting Former PM Indira Gandhi on 100th Birthday Anniversary today

1917ம் ஆண்டு நவம்பர் 19-ல் அலகாபாத்தில் பிறந்தார் இந்திராகாந்தி. மிகவும் தைரியமான குணம் கொண்ட இவர், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், இந்தியாவின் பிரதமராகவும் பணியாற்றி உள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் தான் 1975-ல் எமர்ஜென்ஸி கொண்டுவரப்பட்டது.

இன்று அவரது நூறாவது பிறந்தநாள் விழாவையொட்டி முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் இந்திரா காந்தி பிறந்த நாள் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், 'உங்களுடைய பிறந்தநாளில் உங்களுடனான நினைவுகளை மகிழ்ச்சியோடு நினைத்துப்பார்க்கிறேன். எங்களின் பலம் நீங்கள் தான். எங்களுக்கு வழிகாட்டியும் நீங்கள் தான்' என்று பதிவிட்டிருக்கிறார்.

அதுபோல பிரதமர் நரேந்திரமோடியும் இந்திராகாந்தி பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு என் அஞ்சலிகள் என குறிப்பிட்டுள்ளார்.

English summary
Indian Leaders Respecting Former PM Indira Gandhi on her 100th Birthday Anniversary today. PM Narendra Modi Expressed his Tribute over Twitter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X