இஸ் இட் லைவ்?.. ஆடிப் போன சசிகலா புஷ்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுகவின் இரு அணியின் நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்த சசிகலா புஷ்பா, இந்த பேட்டி நேரலையா என்று கேட்டு ஆம் என்றதும் அதிர்ந்து போனார்.

அதிமுக இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் குறித்து டெல்லியி ல் சசிகலா புஷ்பா எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓ.பன்னீர் செல்வத்தை நம்பி அவர் பின்னால் சென்ற தமிழக மக்களுக்கு உச்சக்கட்ட துரோகத்தை அவர் செய்து விட்டார். அந்த புண்ணியவதியின் சமாதியில் தியானம் செய்துவிட்டு பச்சை துரோகம் செய்துவிட்டார்.

Is it Live?, Sasikala Pushpa gets shock

முதல்வர், அமைச்சர்கள் ஊழலில் திளைத்தவர்கள். வருமான வரித்துறை நடத்திய ரெய்டுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை போலீஸ் அதிகாரி கன்னத்தில் அறைந்தார். இப்படி காவல்துறையும் ஊழலில் ஊறிவிட்டதால் டிடிவி தினகரன் வழக்கை தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்றார்.

மேலும் விவசாயிகளையும், திருப்பூர் காவல்துறை ஏடிஎஸ்பி பாண்டியராஜனையும் ஒருமையில் பேசிய சசிகலா புஷ்பா பேட்டி நிறைவடைந்ததும் இஸ் இட் லைவ், இது நேரலையா என்று கேட்டதற்கு செய்தியாளர்கள் ஆம் என்றதும் ஆடி போய்விட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala Pushpa M.P. severly condemns OPS, TN Govt, Police department and asked the interview program is live? As soon as they said yes she was get shocked.
Please Wait while comments are loading...