For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விக்ரம் வேதா கேள்விகள்... குஜராத்தில் மிரள வைத்த காங்கிரஸ்... வொர்க் அவுட் ஆனதா ராகுல் தியரி!

குஜராத் தேர்தலில் பாஜகவை மிரள வைக்கும் வகையில் முன்னிலை நிலவரத்தில் தொடர்ந்து அந்தக் கட்சியை விரட்டி வருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் இந்த வெற்றி நாடாளுமனற்த் தேர்தலுக்கான முன்னோட

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    விக்ரம் வேதா கேள்விகள். குஜராத்தில் மிரள வைக்கும் காங்கிரஸ். வொர்க் அவுட் ஆகிறதா ராகுல் தியரி!

    குஜராத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலைவிட காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் மட்டுமே கூடுதல் வெற்றியை பெறும் என்று கணித்திருந்தன. ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது முதலே பாஜக முன்னிலையில் இருந்தாலும், அவர்களை மிரள வைக்கும் வகையில் தொடர்ந்து விரட்டி வந்தது காங்கிரஸ் கட்சி.

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக வெற்றி பெறும் என்ற கணித்ததால் குஷியில் இருந்த அந்தக் கட்சியினருக்கு வாக்கு எண்ணிக்கையின் போது வெளியான முன்னணி நிலவரங்களால் சற்று ஜெர்க் ஆனார்கள்.

    தொடக்கம் முதலே பாஜக, காங்கிரஸ் இடையே முன்னணி நிலவரத்தில் கடும் போட்டி இருந்தது. காலை 10 மணி நிலவரப்படி பாஜக 78 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 64 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. 22 ஆண்டுகள் குஜராத்தை ஆண்டு வரும் பாஜகவின் ஆட்சியை வீழ்த்துவதற்காக ராகுல்காந்தி இந்த முறை களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்.

    ராகுல்காந்தியின் தொடர் கேள்விகள்

    ராகுல்காந்தியின் தொடர் கேள்விகள்

    குஜராத்தில் வளர்ச்சி, வளர்ச்சி என்று மார் தட்டிக் கொண்டது பாஜக, ஆனால் என்ன வளர்ச்சி செய்யப்பட்டிருக்கிறது என்பது தான் ராகுலின் பிரதான பிரச்சாரமாக இருந்தது. விக்ரம் வேதா போன்று பாஜகவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தினம் ஒரு கேள்வி கேட்டு குடைச்சல் கொடுத்தார் ராகுல்காந்தி. குஜராத்தில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு எங்கு இருக்கிறது என்று அடுத்தடுத்து புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்தார்.

    இருமாப்பை உடைத்த காங்கிரஸ்

    இருமாப்பை உடைத்த காங்கிரஸ்

    ராகுல்காந்தி தலைவராவது முடிவான பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் இதன் வெற்றி என்பது அனைவராலும் உற்று நோக்கப்பட்டது. ஏனெனில் இந்த தேர்தலில் வெளிப்படும் மக்களின் கருத்துகளே 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று நம்பப்பட்டது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சி தலைதூக்கவே முடியாது என்று இருமாப்பாக இருந்த பாஜகவிற்கு தேர்தல் முடிவுகள் பாடத்தை புகட்டியுள்ளதாகவே தெரிகிறது.

    முந்தும் காங்கிரஸ்

    முந்தும் காங்கிரஸ்

    குஜராத்தில் 1985ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 149 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதன் பிறகு 32 ஆண்டுகளாக 60 தொகுதிகள் என்ற அளவிலேயே வெற்றி பெற்றுள்ளது. 2012 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் வென்றுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை நெருங்குகிறது.

    ட்ரைலரே இப்படியா?

    ட்ரைலரே இப்படியா?

    எனவே ராகுல்காந்தியின் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரம் கைகொடுக்கத் தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் காட்டும் ட்ரைலரே இப்படி இருந்தால் 2019 லோக்சபா தேர்தலில் காட்டப் போகும் மெயின் பிச்சர் எப்படி இருக்கப் போகிறது என்பது தான் தற்போதைய தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு.

    English summary
    Congres President Rahulgandhi's first election result increases the hopes of Congress party among the people and is this the trailer for Loksabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X