For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரோவின் சூப்பர் பிளான்.. மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க 2 டிவி சேனல்

மக்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க 2 டிவி சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும், பள்ளி மாணவர்களிடையே அறிவியல் பயிற்சி முகாமை நடத்துவதற்காகவும் 2 டிவி சேனல்களை தொடங்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன், "8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக இஸ்ரோ மாணவர்களின் திறன் வளர்க்கும் திட்டங்களை உருவாக்கும்" என்று தெரிவித்தார்.

ISRO plans to launch 2 TV Channel for inculcate scientific temper

தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "விண்வெளி முகமை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 25 முதல் 30 நாட்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி காலங்களில் மாணவர்கள் தங்களுடைய சிறிய செயற்கைகோள்களைத் தயாரிக்க ஆய்வகங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் சென்றடையும் வகையில் டிவி சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளது பற்றி கூறுகையில், நம்மிடம் அறிவியலுக்காக தனியாக டிவி சேனல் எதுவும் இல்லை. அதனால், இஸ்ரோ தொடங்கும் டிவி மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் என்று கூறினார்.

விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய சிந்தனைகளுடன் வருபவர்களுக்காக ஒரு காப்பீட்டு மையம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது பற்றி இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். இது குறித்து சிவன் கூறுகையில், "நமக்கு புதிய விண்வெளி சிந்தனையாளர்களுக்கான ஒரு காப்பீட்டு மையம் தேவை. இதில் எங்களுடைய நோக்கம் சிறந்த அறிவு, சிறந்த ஆராய்ச்சி. இதில் ஏற்படும் வளர்ச்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் ஈடுபடும் புதிய அறிவியலாளர்கள் எங்களுடன் சேராமலே இஸ்ரோவுக்கு பங்களிப்பு செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
ISRO Chief K.Sivan says on Monday in Bangalore that, we have plans to launch 2 TV Channel for inculcate scientific temper among student and people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X