பிரபல நடிகைக்கு அடிக்கப் போகும் “அதிர்ஷ்டம்”.. இனி அவர் ”மாண்புமிகு”.. நினைத்தது நிஜத்தில் நடக்குமா?
அமராவதி : ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் பிரபல நடிகையும் நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரோஜாவுக்கு அமைச்சர் பதவியை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து, சில ஆண்டுகளில் அவரது மகனான ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி
முன்னதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் பிரபல நடிகையான ரோஜா தன்னை இணைத்துக் கொண்டு கட்சிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் அவருக்கு நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு வெற்றியும் பெற்றார். ஜமா ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு முக்கிய துறை ஒதுக்கப்படலாம் எனவும் அல்லது அவர் துணை முதல் அமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் அப்போது ரோஜாவுக்கு அமைச்சர் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நடிகை ரோஜா
இதனால் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ரோஜா பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளான போதிலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். ஜெகன் மோகன் ரெட்டி உடன் அவர் மோதல் போக்கை கடைபிடிக்காமல் சுமுகமாகவே நடந்து கொண்ட நிலையில், இரண்டு ஆண்டுக்குப் பிறகு ஆந்திர மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் எனவும் அப்போது அமைச்சர் பதவி மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே கூறியிருந்தார்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
இந்நிலையில் ஆந்திர சட்டப்பேரவை யில் 2022 - 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் நிதியமைச்சர் புக்கன ரெட்டி தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது திருக்குறளை மேற்கோள் காட்டி சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுமெனவும், முன்னர் வாய்ப்பளிக்கபடாதவர்களுக்கு அப்போது வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்தார்.

அமைச்சர் வாய்ப்பு
இதனிடையே ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாகப் பிரிக்கப்படவுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியானது. தற்போது சித்தூர் மாவட்டம், சித்தூர், நகரி என இரு மாவட்டங்களாக பிரிக்கப்படவுள்ள நிலையில் நகரி தொகுதியில் எம் எல் ஏ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக திறப்பு நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக கட்சிக்காக உழைக்கும் அவருக்கு இந்த முறை நிச்சயம் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படுமென அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications