அடேங்கப்பா.... ஒரு பீட்ஸா விலை ரூ. 77 லட்சமா? - அதில் அப்படி என்னதான் இருக்கு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இத்தாலி நகரத்தில் ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் தயாரிக்கப்படும் அந்த பீட்ஸாவின் விலை 77 லட்ச ரூபாய். உலகின் முக்கிய சமையல் கலைஞர்கள் இணைந்து இந்த பீட்ஸாவை உருவாக்கி இருக்கிறார்கள்.

உலகிலேயே விலை அதிகமான உணவுப் பொருட்களைப் பற்றி தனியார் உணவு ஆராய்ச்சி நிறுவனம் ஒரு பட்டியல் வெளியிட்டு உள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று உலகில் விலை அதிகமான உணவுகள் குறித்த சுவாரஸ்யமான பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் உலகிலேயே விலை அதிகமான பீட்ஸா ஒன்று இடம் பெற்றுள்ளது.

பீட்ஸா விலை ரூ. 77 லட்சம்

பீட்ஸா விலை ரூ. 77 லட்சம்

இத்தாலி நகரத்தில் ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் தயாரிக்கப்படும் அந்த பீட்ஸாவின் விலை 77 லட்ச ரூபாய். உலகின் முக்கிய சமையல் கலைஞர்கள் இணைந்து இந்த பீட்ஸாவை உருவாக்கி இருக்கிறார்கள்.

உலகின் காஸ்ட்லி மது

உலகின் காஸ்ட்லி மது

மிகவும் சிரத்தையோடு உருவாகி இருக்கும் இந்த பீட்ஸாவின் பெயர் ‘லூயிஸ் 13' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். இரண்டு பேர் சாப்பிடக்கூடிய இந்த பீட்ஸாவை நீங்கள் வாங்கினால் உலகின் காஸ்ட்லி மதுபானமாக ரெமி மார்ட்டினோடு இது பரிமாறப்படும்.

சிக்கன் மற்றும் வாசனைப் பொருட்கள்

சிக்கன் மற்றும் வாசனைப் பொருட்கள்

இந்த பீட்ஸாவின் அடிப்பாகம் தயாரிக்கப்பட்டு 72 மணிநேரம் பதப்படுத்தப்படும் அதன் பின் அதில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட மிகச்சிறந்த சிக்கன் மற்றும் வாசனைப் பொருட்களோடு இந்த பீட்ஸா தயாரிக்கப்படுகிறது.

வெஜ், நான் வெஜ் பீட்ஸா

வெஜ், நான் வெஜ் பீட்ஸா

மொத்தம் மூன்று வகைகளில் இந்த பீட்ஸா கிடைக்கும். சிக்கன், மீன் ஆகிய நான் - வெஜ் பீட்ஸாக்களோடு, ஆஸ்திரேலியாவின் முர்ரே நதியில் இருந்து பெறப்படும் பிங்க் நிற உப்போடு காய்கறிகள் நிறைந்த வெஜ் பீட்ஸாவும் உண்டு என்று இந்த பீட்ஸாவை தயாரித்த ரோஸிட்டோ வையெலோ என்கிற சமையல் கலைஞர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
With different people trying different kinds of experiments with this Italian dish, a group of chefs in Italy went a step ahead and made the most expensive pizza in the world.
Please Wait while comments are loading...