ரொம்ப காஸ்ட்லி! ஒரு மக்காச்சோளம் ரூ.15.. சிறுவனிடம் பேரம் பேசி வாங்கி கட்டிய மத்திய பாஜக அமைச்சர்!
போபால்: ரூ.15க்கு விற்ற மக்காச்சோளத்தை ரொம்ப காஸ்ட்லி எனக்கூறி சிறுவனிடம் பேரம் பேசிய மத்திய இணை அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தேவை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
Recommended Video
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பக்கன் சிங் குலாஸ்தே. பாஜகவை சேரந்த இவர் மாண்ட்லா தொகுதி எம்பியாக உள்ளார்.
இவர் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் எஃகு மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

ரொம்ப காஸ்ட்லி என பேரம்
இந்நிலையில் தான் பக்கன் சிங் குலாஸ்தே தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் காரில் இருந்து இறங்கிய பக்கன் சிங் குலாஸ்தே சாலையோர வியாபாரியை நோக்கி செல்கிறார். அதன்பிறகு 3 மக்காச்சோளத்தை வாங்கிய அவர் எவ்வளவு என கேட்கிறார். அதற்கு வியாபாரியான சிறுவன் ரூ.45 என பதில் கூறினார். இதைக்கேட் அமைச்சர் ஒரு மக்காச்சோளம் 15 ரூபாயா?. இதெல்லாம் ரொம்ப காஸ்டலி என கூறுகிறார்.

சரியான விலை தான் சார்
இருப்பினும் அந்த வியாபாரி சிரித்த முகத்துடன், "இது சரியான விலை தான் சார். நீங்கள் காரில் வந்திருப்பதால் உங்களுக்கென விலையை கூட்டி விற்கவில்லை'' என கூறுகிறார். இதைக்கேட்ட அமைச்சர் "இந்த பகுதியில் மக்காச்சோளம் இலவசமாகவே கிடைக்கிறது. அப்புறம் ஏன் இந்த விலை உயர்வு'' என கேட்டு கொண்டே அவர் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு செல்கிறார். தற்போது இந்த வீடியோ அதிகமாக வைரலாகி வருகிறது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சாலையோர வியாபாரியிடம் பேரம் பேசியதை எதிர்க்கட்சியினரும் , பொதுமக்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

விமர்சனம்-கண்டனம்
மத்திய அமைச்சரின் இந்த செயலை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். சாலையோர வியாபாரிடம் பேரம் பேசியதையும், இலவசமாக மக்காச்சோளம் கிடைப்பதாக கூறியதற்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதோடு சிலர் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
|
கருத்து கூறிய அமைச்சர்
இருப்பினும் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றிய வீடியோவுடன் குறிப்பிட்டு இருந்த கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதாவது, ‛‛இன்று உள்ளூர் வியாபாரி விற்ற மக்காச்சோளத்தை ருசித்தோம். நாம் அனைவரும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகளின் உணவு பொருட்களை வாங்க வேண்டும். இது அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, நமக்கும் கலப்படமற்ற பொருட்களை கிடைக்க செய்யும்'' என குறிப்பிட்டு இருந்தார். இதனையும் குறிப்பிட்டு ஒருவர் விமர்சித்ததார். அதில், ‛‛எழுதிய கருத்து நல்லா இருக்கு.. ஆனால் வீடியோவில் செய்த செயல் நல்லா இல்லை'' என கூறியுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications