For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவ்ளோதான்! காஷ்மீர் தொகுதி வரையறையில் மூக்கை நுழைக்காதீங்க! பாக்., தீர்மானத்தை நிராகரித்த இந்தியா

Google Oneindia Tamil News

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை இந்தியா நிராகரித்துள்ள நிலையில் ‛‛இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களி்ல் மூக்கை நுழைக்காதீங்க. இந்த தீர்மானம் கேலிக்கூத்தானது. இதை நிராகரிக்கிறோம். முதலில் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்த்துவிட்டு எல்லை தாண்டும் தீவிரவாதத்தை நிறுத்துங்கள்'' என இந்தியா விளாசியுள்ளது.

Recommended Video

    Pakistan-க்கு India கொடுத்த Warning | Arindam Bagchi | Jammu Kashmir Delimitation | #National

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370ஐ 2019ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினால் கூட மத்திய அரசு நிறைவே்றியது.

    21 கிமீ! 7 என்ட்ரி! 6 எக்சிட்! டபுள் டக்கர் பாலம்.. சென்னை துறைமுகத்திற்கு இனி பறக்கலாம்! சூப்பர் 21 கிமீ! 7 என்ட்ரி! 6 எக்சிட்! டபுள் டக்கர் பாலம்.. சென்னை துறைமுகத்திற்கு இனி பறக்கலாம்! சூப்பர்

    மேலும் மாநிலமாக செயல்பட்டு வந்த ஜம்மு காஷ்மீர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அங்கு துணை நிலை ஆளுநர் தலைமையில் நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

    ஆளுநர் மூலம் நிர்வாகம்

    ஆளுநர் மூலம் நிர்வாகம்

    ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்கா செயல்பட்டு வருகிறார். இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். இங்கு மக்களாட்சி நடைபெறவில்லை. யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் தொகுதிகள் மறுவரையறை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக எல்லை நிர்ணய ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

     அறிக்கை தாக்கல்

    அறிக்கை தாக்கல்

    ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் மூன்று பேர் இந்த ஆணையத்தில் இடம்பெற்றிருந்தனர். இந்த ஆணையம் 2020 முதல் செயல்பட்டு வருகிறது. தொடர் ஆய்வுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறை செய்யும் பணி முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 83ல் இருந்து 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகளுக்கான 24 தொகுதிகள் நிலுவையில் வைக்கபட்டுள்ளது.

    பாகிஸ்தானில் தீர்மானம்

    பாகிஸ்தானில் தீர்மானம்

    இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது தொகுதி மறுவரையறை செய்த குழு உள்நோக்கத்துடனும், இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியதோடு, மறுவரையறையை நிராகரிப்பதாக தெரிவித்து இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அதோடு தொகுதி மறுவரையறையை எதிர்த்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தியா நிராகரிப்பு

    இந்தியா நிராகரிப்பு

    இதற்கு தற்போது இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தமன் பாக்சி சரமாரியாக பாகிஸ்தானை தாக்கியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என எச்சரிக்கை விடுத்த அவர் தீர்மானத்தை நிராகரிப்பதாக கூறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:

    கேலிக்கூத்தானது

    கேலிக்கூத்தானது

    ‛‛ ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் முழுமையாக இந்தியாவுக்கு சொந்தமானவை. இந்த யூனியன் பிரதேசங்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி தொடர்பான விஷயங்கள் எங்களின் உள்நாட்டு விவகாரங்களாகும். இதில் பாகிஸ்தான் மூக்கை நுழைக்க வேண்டாம். காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு சட்டப்படி நடக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் நிறைவேற்றிய தீர்மானம் கேலிக்கூத்தானது. இதை நிராகரிக்கிறோம். இந்தியாவின் உள்விவகாரங்களில் எந்த நாடுகளும் தலையிட முடியாது. சொந்த நாட்டு பிரச்சனைகளை தீர்க்காமல் இந்திய விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம். ஆத்திரமூட்டும் வேலைகளை செய்ய வேண்டாம். முதலில் எல்லை தாண்டும் தீவிரவாதத்தை நிறுத்துங்கள்'' என விளாசியுள்ளார்.

    English summary
    Pakistan passed a resolution in parliament against the Jammu and Kashmir delimitaiton. While India has rejected this and says, ‛‛It is farcical. pakistan should not interfere in India's internal affairs. Pakistan first Solve the internal problems and terrorism ”.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X