For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புல்லட் ப்ரூப் வேண்டாம்.. எடுத்து விடுங்கள்.. ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டிய அமித் ஷா

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தனக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத கண்ணாடிகள் அகற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மக்களோடு நேரடியாக பேச விரும்புகிறேன் என்பதால் இந்த இடையூறு தேவையற்றது என்று அவர் தெரிவித்தார்.

மூன்று நாட்களில் ஜம்மு காஷ்மீர் பயணமாக நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்ரீநகர் வருகை தந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரில் 3 நாட்கள் முகாமிட்டார்.

தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்! தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்!

குண்டு துளைக்காத கண்ணாடிகள்

குண்டு துளைக்காத கண்ணாடிகள்

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய அவர் திங்கள்கிழமையான, இன்று, ஷேர் இ காஷ்மீர் அரங்கத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் மைக் இருந்த போடியம் அருகே வந்து நின்றபோது அங்கே பொருத்தப்பட்டிருந்த குண்டு துளைக்காத கண்ணாடிகளை எடுத்துவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த கண்ணாடிகள் அகற்றப்பட்டன.

மக்களோடு பேசுகிறேன்

மக்களோடு பேசுகிறேன்

அப்போது அவர் பேசும்போது, நான் மக்களோடு நேரடியாக வெளிப்படையாக பேச விரும்புகிறேன். எனவே இந்த தடுப்புகள் எங்களுக்குள் தேவையில்லை என்றார்.

பரூக் அப்துல்லா

பரூக் அப்துல்லா

மேலும் அவர் பேசுகையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பரூக் அப்துல்லா தெரிவிக்கிறார். ஆனால் நான் பரூக் அப்துல்லா அவர்களிடம் தெரிவிக்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நான் இந்தப் பள்ளத்தாக்கின் மக்களோடும், இங்குள்ள இளைஞர்களோடும் தான் பேச விரும்புகிறேன். பாகிஸ்தானோடு கிடையாது.

பலன் கிடைக்கும்

பலன் கிடைக்கும்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை முன்னேற்ற வேண்டும் என்பதால்தான் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு நீக்கியது. 2024ம் ஆண்டுக்குள் நாங்கள் எடுத்த இந்த நடவடிக்கைக்கான பலனை நீங்கள் பார்ப்பீர்கள். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

English summary
Jammu Kashmir: Union Home minister Amit Shah today told the crowd that he wanted to speak to the people directly so he no need to have a bulletproof glass shield.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X