For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்தாண்டு பூஜையில் பரிதாபம்.. ஜம்மு காஷ்மீர் தேவி கோவில் கூட்ட நெரிசலில் 12 பேர் பலி.. பலர் காயம்!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி பவன் கோவிலில் கூட்ட நெரிசல் காரணமாக 12 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    புத்தாண்டு பூஜையில் பரிதாபம்.. ஜம்மு காஷ்மீர் தேவி கோவில் கூட்ட நெரிசலில் 12 பேர் பலி.. பலர் காயம்!

    ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் அமைந்துள்ளது மாதா வைஷ்ணோ தேவி பவன் கோவில். இது பார்வதியை வழிபட கூடிய கோவில் ஆகும்.

    இங்கு ஆண்டுதோறும் பலலட்சம் பக்தர்கள் வருவது வழக்கம். புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே வந்து இருந்தனர்.

    அந்த வீடியோவை நோட் பண்ணீங்களா? அன்னபூரணிக்கு இவ்வளவு பக்தர்கள் வந்தது எப்படி? என்னதான் நடந்தது? அந்த வீடியோவை நோட் பண்ணீங்களா? அன்னபூரணிக்கு இவ்வளவு பக்தர்கள் வந்தது எப்படி? என்னதான் நடந்தது?

    சிறப்பு பூஜை

    சிறப்பு பூஜை

    இங்கு நேற்று மாலையில் இருந்து அதிகாலை வரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இரவு முழுக்க இந்த பூஜையில் பலர் கலந்து கொண்டனர். இந்த பூஜைக்கு பலர் வந்திருந்த நிலையில் அங்கு கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    தள்ளுமுள்ளு

    தள்ளுமுள்ளு

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை 2.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்து பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    அனுமதி

    அனுமதி

    காயம் அடைந்தவர்கள் நாராயண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். பலருக்கு தொண்டையில், முகத்தில், நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு மோசமான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    பலி

    பலி

    காயம் அடைந்தவர்களின் இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மற்றும் ஜம்முவில் இருந்து வந்த பக்தர்கள் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் இரங்கல்

    பிரதமர் இரங்கல்

    தேவி கோயில் கூட்ட நெரிச‌லில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். நெரிச‌லில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும். இவர்களின் மரணம் எனக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்துகிறது என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    English summary
    Jammu Kashmir Temple Stampede: 12 people died and many injured during the special pooja.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X