For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் ஒரு வாரத்துக்கு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லையாம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளபோதிலும், அவருக்கு ஜாமீன் கிடைக்க இன்னும் ஒரு வார காலம் ஆகும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு நான்காண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி அவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளார். மேலும், இம்மூவருக்கும் கூட்டு சதி பிரிவிலும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆயினும் அதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.

ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு

ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு

மூன்றாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், குற்றவாளிகள் கீழ் கோர்ட்டில் ஜாமீன் பெற முடியாது என்பது விதிமுறை. எனவே ஜெயலலிதா சார்பில் ஜாமீன் கேட்டு இன்று பெங்களூர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல மற்ற மூவர் தரப்பிலும் ஜாமீன் கேட்டு ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு என்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்பது இன்று மாலையில் தெரியவரும்.

விடுமுறை கால அமர்வு

விடுமுறை கால அமர்வு

இந்நிலையில், தசரா விடுமுறையால் கர்நாடக ஹைகோர்ட் நீதிபதிகள் விடுப்பில் சென்றுள்ளதால், விடுமுறைக்கால அமர்வுதான் ஜெயலலிதா மீதான ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டியுள்ளது.

நீதிபதிகள் தயாரா?

நீதிபதிகள் தயாரா?

நாளை அல்லது நாளை மறுநாள்தான் விடுமுறை அமர்வு முன்பு ஜாமீன் மனு வரும் என்று தெரிகிறது. அவ்வாறு வந்தாலும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிக்க விடுமுறை அமர்வு தயாராக இருக்காது என்று சட்ட வல்லுநர்கள் சிலர் தெரிவித்தனர். ஏனெனில் நாடே உற்று கவனிக்கும் ஒரு வழக்கில், தலையிட்டு, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குவதையோ, அல்லது தீர்ப்பை சஸ்பெண்ட் செய்வதையோ விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் விரும்பமாட்டார்கள் என்றே சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடுத்த வாரம்தான் வாய்ப்பு

அடுத்த வாரம்தான் வாய்ப்பு

தசரா விடுமுறைக் காலம் முடிந்து, அக்டோபர் 6ம்தேதியான திங்கள்கிழமை, ஹைகோர்ட் முழுமையாக செயல்பட தொடங்கும்போதுதான் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே இந்த வாரம் முழுவதுமே சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஜெயலலிதாவுக்கு வந்துள்ளதாக மூத்த வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்தனர்.

English summary
Jayalalitha may get bail one week later as Karnataka high court in the Dasara vacation for this week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X