ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரம்.. காங். வெளியிட்ட தலைவர்கள் பட்டியலில் பிரியங்கா காந்தி பெயரில்லை
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள நட்சத்திர தலைவர்கள் பட்டியலில் பிரியங்கா காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. அதேநேரம் சோனியா காந்தி, ராகுல் காந்தி மன்மோகன் சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.
இருப்பினும் ஜார்க்கண்டில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள கூடுதல் தலைவர்களின் பட்டியலை கட்சி வெளியிடும் என்றும எனவே இதைபற்றி கவலைப்பட வேதவையில்லை என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பிரச்சாரகர்கள் பட்டியலில் தனது பெயரை அறிவிக்க பிரியங்கா காந்தியின் ஒப்புதலை காங்கிரஸ் இன்னும் பெறவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 5 கட்டமாக ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் பிரியங்கா காந்தி பெற வாய்ப்பு உள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள்.
முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் செய்யும் தலைவரக்ள் பட்டியல் மட்டுமே தற்போது வந்துள்ளதாகவும் மேலும் நான்கு கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளதால் அந்த பட்டியல்களில் பிரியங்கா காந்தியின் பெயர் இடம்பெறும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி ஜார்க்கண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் மூன்று பட்டியல்களாக இதுவரை வெளியிட்டுள்ளது. ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் உள்ள 81 இடங்களில் 31 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications