For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயமான 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை போலீஸ் கண்டுபிடித்தது.. சட்டசபைக்கு விரைவு!

கர்நாடக சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதவி ஏற்பில் கலந்து கொள்ளாத 2 எம்எல்ஏக்கள் யார்?- வீடியோ

    பெங்களூர்: காலையில் எம்எல்ஏ பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமல் மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் பெங்களூரு ஹோட்டலில் இருந்து சட்டசபைக்கு புறப்பட்டனர். இருவரையும் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர் ரெட்டி கடத்தி வைத்திருந்ததாக புகார் வைக்கப்பட்டு இருந்தது.

    இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.

     Karnataka Assembly Floor Test: 2 Congress MLAs went missing from assembly

    இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.

    இவ்வளவு பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் சூழ்நிலையில் தற்போது சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நடத்து வருகிறது . தற்காலிக சபாநாயகர் போப்பையா எம்எல்எங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மாலை வாக்கெடுப்பு நடக்கும் என்பதால் இப்போதே எல்லோரும் பதவி ஏற்றாக வேண்டும்.

    கர்நாடக சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோர் காலையில் கலந்து கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பு அவர்கள் பதவி ஏற்கவில்லை என்றால், மாலை சபையில் காங்கிரஸ் - மஜத கட்சியின் பலம் 117ல் இருந்து, 105 ஆக குறையும் .

    இந்த நிலையில் அவர்களை பாஜகவை சேர்ந்த சோமசேகர ரெட்டி கடத்தி வைத்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதற்காக போலீஸ் அவர்களை தேடி வந்தது. டிஜிபி ஆணையின் பேரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருந்த ஹோட்டலில் போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தியது.

    இந்த நிலையில் அவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள கோல்ட் பின்ச் ஹோட்டலில் இருந்துள்ளனர். போலீஸ் அவர்களை மீட்டது. தற்போது இவர்கள் இருவரும் சட்டசபைக்கு பதவியேற்பிற்காக அழைத்து வரப்படுகிறார்கள்

    English summary
    Congress MLAs Anand Singh and Pratap Patil have not arrived at the assembly as yet. The house strength is now 219.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X