கர்நாடக தேர்தல்: லிங்காயத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் காங்கிரஸ், பாஜக.. இத்தனை வேட்பாளர்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சி வேட்பாளர் பட்டியலிலும் லிங்காயத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் வியூகங்கள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    Karnataka Elections 2018: Parties focusing on Lingayats to get votes

    தற்போது அங்கு பிரச்சாரத்திற்காகவும், வேட்பாளர்கள் தேர்வுக்காகவும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது.

    முக்கிய வேட்பாளர்கள் பெயர் இதில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சித்தராமையா இந்த முறை தன்னுடைய பழைய தொகுதியான சாமுண்டேஸ்வரி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட உள்ளார்.

    இதில் காங்கிரஸ் கட்சிகளும் லிங்காயத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மொத்தம் 40 லிங்காயத்து வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 25 வோகாலிகா வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 15 முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 15 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். 5 பிராமின்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    சில நாட்களுக்கு முன் பாஜகவும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. பாஜக முதற்கட்ட பட்டியலில் 72 பேர் இருக்கிறார்கள். இதில் ஒரு முஸ்லிம், கிறிஸ்துவ, ஜெயின் இன வேட்பாளர் கூட இடம்பெறவில்லை. இந்துக்களுக்கு மட்டுமே இந்த வேட்பாளர் பட்டியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 72 பேரில் லிங்காயத்துகள் 21 பேர், 10 வோகாலிகா, 19 பிறப்படுத்தப்பட்ட மக்கள், 5 பிராமணர்கள் இடம்பெற்றுள்ளனர். இன்னும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

    English summary
    Parties focusing on Lingayats to get votes in Katnataka election. The big news for the day from battlefield Karnataka would be the Congress's first list of candidates. On Saturday there were marathon meetings held in Delhi even as the Congress tried to finalise its list of candidates. The meeting remained inconclusive and a decision is expected today.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற