காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சித்தராமையா கேட்டது கிடைக்கவில்லை ஆனால்...
Recommended Video

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியினரின் பட்டியல் வெளியாகியுள்ளது. முதல்வர் சித்தராமையா எதிர்பார்த்தது மட்டும் நடக்கவில்லை.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பிய காங்கிரஸ் கட்சியினருக்கு நேர்காணல் நடத்தி அதில் அவர்களிடம் பல கேள்விகள் கேட்டு ஆட்களை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. தற்போது பதவியில் உள்ள பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

சாமுண்டேஸ்வரி
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து முதல்வர் சித்தராமையா சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக அவர் அங்கு 7 முறை போட்டியிட்டதில் 5 முறை வெற்றி கண்டுள்ளார். கடந்த 2008 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அவர் வெற்றி பெற்ற வருணா தொகுதியில் அவரின் மகன் போட்டியிடுகிறார்.

ஆர்வம்
சித்தராமையா இரண்டு தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக இருந்தாராம். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிடம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டதாம். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் போட்டி துவங்குவதற்கு முன்பே தோல்விக்கான அறிகுறியாகிவிடும் என்று ராகுல் காந்தி சித்தராமையாவிடம் கூறினாராம்.

அதிருப்தி
ராகுலின் முடிவு சித்தராமையாவுக்கு மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும் தான் விரும்பிய நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கிக் கொடுத்துவிட்டார். மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் இருந்து விலகி அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 7 பேருக்கும் வாக்குறுதி அளித்தபடி டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளார் சித்தராமையா.

பிதார் தெற்கு
அசோக் கென்னிக்கும் டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளார் அவர். கென்னிக்கு டிக்கெட் வழங்க கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும் சித்தராமையா அவர்களை சமாளித்து பிதார் தெற்கு பகுதியில் அவர் போட்டியிட அனுமதி பெற்றுள்ளார்.

குமாரசாமி
போக்குவரத்து துறை அமைச்சர் ரேவண்ணாவின் பெயரை பரிந்துரைத்த சித்தராமையா அவர் சன்னபட்டனாவில் ஹெச்.டி. குமாரசாமிக்கு எதிராக போட்டியிடும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேலிடம்
சாந்திநகர் தொகுதியை சேர்நத் என்.ஏ. ஹாரிஸின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லை. அவரின் பெயர் இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாரிஸ் விஷயத்தில் சித்தராமையாவை இறுதி முடிவு எடுக்குமாறு மேலிடம் தெரிவித்துள்ளது. சாந்திநகர் தொகுதியில் போட்டியிட ரிஸ்வான் அர்ஷதுக்கு டிக்கெட் கொடுக்குமாறு காங்கிரஸார் பலர் பரிந்துரை செய்துள்ளனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications