டீசல் விலை சரிவு: கர்நாடக அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் குறைப்பு! தமிழகத்தில் எப்போது?
பெங்களூரு: கர்நாடக போக்குவரத்து கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது: டீசல் விலை குறைந்துள்ள நிலையில் பஸ் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. அதையேற்று பஸ் கட்டணத்தை குறைக்க அரசு முன்வந்துள்ளது.

கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) சாதாரண கட்டண பேருந்துகளுக்கு இந்த கட்டண குறைப்பு பொருந்தும், வோல்வோ மற்றும் சொகுசு பேருந்துகளுக்கு கட்டண குறைப்பு பொருந்தாது.
கேஎஸ்ஆர்டிசி பஸ்களில், 2வது ஸ்டேஜ் முதல் 4வது ஸ்டேஜ் வரையில் தலா ரூ.2 ரூபாய் குறைக்கப்படும். 4வது ஸ்டேஜ் முதல் 17வது ஸ்டேஜ்வரைப்பட்ட பகுதிகளில் தலா ரூ.1 குறைக்கப்படும்.
பெங்களூரு மாநகர பேருந்துகளில் ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் தலா ரூ.1 குறைக்கப்படுகிறது. இந்த கட்டண குறைப்பு அறிவிப்பு, வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். இவ்வாறு ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
அதெல்லாம் ஓ.கே. தமிழக அரசு பஸ்களில் கட்டணம் எப்போது குறைக்கப்படும்?












Click it and Unblock the Notifications