கர்நாடகாவில் பரபரப்பு- ரூ500 கோடி லஞ்சம்- முதல்வர் சித்தராமையா மீது புது வழக்கு போட ஆளுநர் அனுமதி?
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் கனிம சுரங்கத்தைப் புதுப்பிப்பதற்கு ரூ.500 கோடி லஞ்சம் வாங்கியதாக முதல்வர் சித்தராமையா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர ஆளுநர் அனுமதிக்க கோரி சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கவுடா மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது ஏற்கனவே முடா நில முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியமான முடா, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கியது என்பதுதான் அந்த வழக்கு.

இந்த வழக்கில் சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என லோக் ஆயுக்தா போலீசார் அறிக்கை தாக்கல் செய்துவிட்டனர். ஆனால் அமலாக்கத்துறையோ விடுவதாக இல்லை. சித்தராமையாவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 17-ந் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில்தான் சித்தராமையாவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது 2015-ம் ஆண்டு முதல், முதல்வராக பதவி வகித்த காலத்தில் 8 கனிம சுரங்கங்களை புதுப்பிக்க ரூ.500 கோடி லஞ்சம் பெற்றார் என்பதுதான் சித்தராமையா மீதான புதிய புகார். சித்தராமையாவின் ரூ.500 கோடி லஞ்சத்தால் கர்நாடகா மாநில அரசுக்கு ரூ.5000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குற்றச்சாட்டு.
ஆகையால் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி தர வேண்டும் என சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கவுடா மனு கொடுத்துள்ளார். இந்த மனு மீது ஆளுநர் என்ன முடிவெடுப்பார்? சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதித்து புதிய அணுகுண்டை ஆளுநர் வீசுவாரா? என்பது கர்நாடகா அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications