கர்நாடக அரசு விளம்பரத்தில் தவறாக இடம் பெற்ற இந்திய வரைபடம்.. வரிந்து கட்ட ஆஜராகிய பா.ஜ.க..
பெங்களூரு : கர்நாடக மாநில சுற்றுலாத்துறை மலேசிய நாட்டு இதழில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இந்திய வரைபடம் தவறாக இடம்பெற்றுள்ளதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
பசிபிக் ஏஷியா டிராவல் அசோசியேஷன் சார்பில் பெங்களூரு, பன்னாட்டு கண்காட்சி மையத்தில் வரும் செப்டம்பர் மாதம் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டிராவல் மார்ட் என்ற பெயரில் சுற்றுலா கண்காட்சியை நடத்ததிட்டமிட்டுள்ளது.

இந்த கண்காட்சி தொடர்பாக மலேசியாவில் இருந்து வெளியாகும் இதழில் பசிபிக் ஏஷியா டிராவல் அசோசியேஷன் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் சுற்றுலாத்துறையின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த கண்காட்சி தொடர்பாக வெளியாகியுள்ள விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய வரைபடம் தவறாக வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பா.ஜ.க, இது குறித்து மாநில காங்கிரஸ் அரசிடமிருந்து விளக்கம் கேட்டுள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்குமார் இந்தியவரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தின் சில பகுதிகள் இடம்பெறாதது நமதுநாட்டின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் முக்கியமான விவகாரமாகும் என்று தெரிவித்தார்.
இந்திய வரைபடத்தில் சில பகுதிகள் இல்லாவிட்டால் பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் மகிழ்ச்சி அடையலாம். எனவே இந்த தவறு மன்னிக்கக்கூடியதல்ல. இதுபோன்ற தவறுகளை மாநில அரசு செய்திருக்கக்கூடாது என்றும் தெரிவித்ததார்.
விளம்பரத்தை வெளியிட்ட மலேசியா நாட்டு இதழ் மீது வழக்கு பதிவு செய்து, சர்ச்சைக்குரிய விளம்பரத்தை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications