பல பெண்களுடன் தொடர்புள்ளது.. சட்டசபைக்குள்ளேயா ஆடினேன்.. அம்பரீஷின் "அடடே" பேச்சு!
பெங்களூரு: கர்நாடகாவில் நடன கிளப்பில் இளம் பெண்ணுடன் ஆட்டம் போட்ட நடிகர் அம்பரீஷுக்கு எதிர்ப்புகள் தொடரும் நிலையில் அவரும் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாரான அம்பரீஷ் தற்போது கர்நாடகத்தில் வீட்டு வசதி துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் அம்பரீஷ் பெங்களூரில் நடன கிளப்புக்கு சென்று சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடன கிளப்பில் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் இருந்தனர். பலர் போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்த கிளப்புக்கு அம்பரீஷ் ஜீன்ஸ், டீசர்ட் அணிந்து திடீரென சென்றார்.

அங்கு ஒரு இளம்பெண்ணை கட்டிப்பிடித்தப்படி நடனம் ஆடினார். அந்த பெண்ணுக்கு எல்லோரது முன்னிலையிலும் முத்தமும் கொடுத்தார். இதனை கிளப்பில் இருந்தவர்கள் ஆச்சரியமாய் பார்த்தார்கள். இளம் பெண்ணுடன் அவர் ஆடிய படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் மேலிடத்துக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
ஆனால் அம்பரீஷின் மனைவி சுமலதா இதுகுறித்து விளக்குகையில், அப்பெண் அம்பரீஷின் நண்பரின் மகள்தான். அது பழைய போட்டோ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அம்பரீஷ் இப்போது விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு நடிகன். சினிமாவில் நிறைய பெண்களோடு நடனம் ஆடி இருக்கிறேன். சட்டசபைக்குள் ஆடவில்லையே.
நிறைய பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. பெண்களுடன் நடனம் ஆடுவது புதிதில்லை. எந்த பெண்ணும் புகார் அளிக்காத நிலையில் என்மேல் குற்றம் சாட்டுவது வியப்பாக உள்ளது'' என்றார்.
அம்பரீஷுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது கர்நாடக அரசு சிங்கப்பூருக்கு அனுப்பி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது. மருத்துவ சிகிச்சைக்கான ரூபாய் 1.22 கோடி செலவையும் அரசே ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications