குரான் வாசிப்போடு துவங்கிய கோவில் தேரோட்டம்.. மத பிரச்சனைகளுக்கு நடுவே கர்நாடகாவில் சுவாரசியம்!
ஹாசன்: கர்நாடகம் மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சென்னகேஷவர் கோவிலின் தேரோட்டம் குரான் படித்தல் மூலம் துவங்கப்பட்டது. பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே வலதுசாரி அமைப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி பாரம்பரிய முறைப்படி துவங்கியது.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்தன. கோவில்களில் முஸ்லிம்களுக்கு கடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
அதன்பிறகு ஹலால் இறைச்சி பிரச்சனை, முஸ்லிம் வியாபாரிகளிடம் பழங்கள் வாங்க கூடாது, முஸ்லிம்களின் வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சூறையாடப்பட்ட கடை
தார்வாரில் சில நாட்களுக்கு முன்பு அனுமன் கோவில் முன்பு முஸ்லிம் வியாபாரியின் நடத்திய கடை இந்துத்துவா அமைப்பினர் சார்பில் சூறையாடப்பட்டது. இதில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதுதவிர மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டால் இந்து கோவில்களிலும் பயன்படுத்தப்படும் என சில இந்து அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் கர்நாடகம் மாநிலம் பதற்றமான நிலையில் உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற சென்னகேஷவர் வில் தேர் திருவிழா பாரம்பரிய முறையுடன் குரான் படித்தல் மூலம் தொடங்கியது. இதுபற்றிய விபரம் வருமாறு:

ஒய்சாலா மன்னர் கோவில்
கர்நாடகம் மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூரில் பிரசித்தி பெற்ற சென்னகேசவா கோவில் உள்ளது. 12ம் நூற்றாண்டில் ஒய்சாலா மன்னர் விஷ்ணுவர்தனன் சோழர்களுக்கு எதிரான தனது வெற்றியை குறிக்கும் வகையில் இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. இது விஜய நாராயணா என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

பிரசித்தி பெற்ற தேரோட்டம்
இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்திருவிழா வெகுவிமரிசையாக நடக்கும். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு விழா நடைபெற்றது. தேர்திருவிழாவை பொறுத்தமட்டில் முஸ்லிம்களின் புனித நூலான குரான் படிப்பதன் மூலம் துவங்கப்படும். இது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

குரான் படிக்க எதிர்ப்பு
ஆனால் மாநிலத்தில் ஏற்கனவே சில பிரச்சனைகள் உள்ளதால் இதை செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே சில இந்துத்துவ அமைப்பினர் சார்பில் குரான் படிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் மாநில அரசு செவிசாய்க்கவில்லை. கோவிலில் பாரம்பரிய முறைப்படி திருவிழா நடத்த அறிவுறுத்தப்பட்டது.

குரான் படிப்பதன் மூலம் துவக்கம்
அதன்படி நேற்று இஸ்லாமிய மதகுரு காசி சையத் சஜீத் பாஷா குரான் படித்தார். இதையடுத்து தேரோட்டம் துவங்கியது. தேர் திருவிழாவில் கலந்து கொண்ட முஸ்லிம் மத குரு சையது சஜாத் பாட்ஷா கூறுகையில், ‛‛கர்நாடகத்தில் எந்த மாவட்டத்திலும் இதுபோன்று ஒரு நிகழ்வு வழக்கத்தில் இல்லை. இந்த நிகழ்வு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வை மக்கள் ஒற்றுமையாக மத நல்லிணக்கத்துடன் நடத்தும் நிகழ்வு ஆகும்'' என பெருமையாக கூறினார்.

ஒற்றுமையை பாதுகாக்க...
இதற்கு ஏராளமானவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனான ரேவண்ணா கூறுகையில், ‛‛கோவில்களில் காலம்காலமாக பின்பற்றப்படும் மரபுகளை பின்பற்ற வேண்டும். இதில் மாநிலத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரின் ஒற்றுமையை ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும். இதில் பிரிவினை கூடாது. மதத்தின் அடிப்படையில் சீர்குலைவு ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.

அறநிலையத்துறை அறிவுரை
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், "நீண்டகாலமாக குரான் படித்து தான் விழா துவங்கப்பட்டு வருகிறது. இது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சில இடங்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடைகளை அமைக்க தடை விதித்து கோயில் நிர்வாகத்தினர் அறிவிப்பு வெளியிட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும், அறநிலையத்துறை பாரம்பரிய முறைப்படி விழா நடத்த அறிவுறுத்தியது " என்றார்.

கடைகள் அமைத்த முஸ்லிம் வியாபாரிகள்
இன்னொரு மூத்த அதிகாரி கூறுகையில், ‛‛விழாவையொட்டி கடைகளை மூடும்படி கோவில் நிர்வாகம் சார்பில் முஸ்லிம் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்துக்கள் மட்டுமின்றி அனைவரும் கடைகள் அமைக்க அரசு அனுமதிக்க கூறியது. அதன்படி 15 முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் அமைத்துள்ளனர்'' என்றார்
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications