முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, லாலுவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு ரத்தாகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி உள்ளிட்ட 3 முன்னாள் முதல்வர்களின் இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் என்.எஸ்.ஜி. எனப்படும் கமாண்டோ படை பாதுகாப்பு மொத்தம் 15 அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முன்னாள் துணை பிரதமர் அத்வானியும் அடக்கம்.

Karunanidhi set to lose NSG cover, Lalu, Akhilesh too on list

இந்த தலைவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனம், 2 பாதுகாப்பு வாகனங்கள், 40 பாதுகாப்பு கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இதேபோல் இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் என பல பிரிவுகளில் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு வழங்கப்படும் தலைவர்கள் எண்ணிக்கையை குறைக்குமாறு மத்திய அரசிடம் கமாண்டோ படைப் பிரிவினர் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது.

இது குறித்து ஆலோசித்த உள்துறை அமைச்சகம் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உபி முதல்வர் அகிலேஷ் யாதவ், அஸ்ஸாம் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர்கள் தருண்கோகய், லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க முடிவு செய்தது. இதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Union Government which reviewed the Z category security being given to various leaders is all set to trim it. Those who are set to lose this privilege are DMK chief M Karunanidhi, former chief minister of Uttar Pradesh, Akhikesh Yadav and Lalu Prasad Yadav.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற