என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்? காஷ்மீர் சிறுமி வீடியோவை பாலியல் வெப்சைட்டில் தேடும் காமுகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பாலியல் சம்பந்தப்பட்ட வீடியோ தளங்களில் காஷ்மீர் சிறுமியின் பெயர்- வீடியோ

  டெல்லி: காஷ்மீரில் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்கள் கிடைக்குமா என்று இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது. இணையத்தில் இருக்கும் பாலியல் சம்பந்தப்பட்ட வீடியோ தளங்களில் இதுகுறித்து அதிகமாக தேடப்பட்டு உள்ளது.

  காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

  Kathuva rape: 8-year-old victim becomes a most searched person in porn website

  ஆனால் இந்த அதிர்ச்சி முடியும் முன்பே இன்னொரு பேரதிர்ச்சி வந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் இணையம் முழுக்க, சில ஆண்கள் அந்த காஷ்மீர் சிறுமியின் அந்தரங்க வீடியோ ஏதாவது கிடைக்குமா என்று பாலியல் தளங்களில் தேடி இருக்கிறார்கள். 3 நாட்களில் பாலியல் தளங்களில் அதிகம் தேடப்பட்ட பெயர், அந்த காஷ்மீர் சிறுமியின் பெயர்தான் என்று கூறப்பட்டுள்ளது.

  அந்த சிறுமி கடைசியாக வாழ்ந்த 5 நாட்கள் மிகவும் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு, சாப்பாடு கூட கொடுக்காமல் கொலை செய்யப்பட்டார். மரணத்திற்கு பின் சிறுமியின் உடலை கூட எரிக்க, அந்த ஊர் இந்துத்துவா ஆட்கள் விடவில்லை. இந்த நிலையில் தற்போது எல்லாம் முடிந்த பின்பும் இணையத்தில் அந்த சிறுமியின் ஆன்மாவை களங்கப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் சிலர்.

  இந்த தேடுதல் எல்லாமே இந்தியாவில் இருந்து செய்யப்பட்டு இருக்கிறது. எல்லோரும் காஷ்மீர் சிறுமிக்காக கண்ணீர் விடும் போது, சில ஆண்களின் மனநிலை மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்ற கேள்வியை இது எழுப்பி இருக்கிறது. இறந்த பின்பும் கூட ஒரு சிறுமியை நிம்மதியாக விடாத சமூகம் என்ன மாதிரியான சமூகம்?

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kathuva, 8-year-old rape victim becomes a most searched person in porn website. An 8-years old Kashmiri Muslim girl brutally raped and killed by 7 Hindutuva groups, in which 4 of them are police. BJP keeping their bad role in this issue. Kashmir girl child has killed inside a Hindu temple, she has been tortured for 5 days.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற