For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் முதல் சோதனை குழாய் குழந்தைகள் கவுரவர்கள்தான்.. ஆந்திர பல்கலை. துணை வேந்தர் பேச்சு

Google Oneindia Tamil News

ஜலந்தர்: கவுரவர்கள் சோதனை குழாய் குழந்தைகள் என்று ஆந்திரா பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று பஞ்சாப்பில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் ஆந்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.நாகேஸ்வர் ராவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சோதனை குழாய் இல்லாவிட்டால், கவுரவர்களின் தாயாரான காந்தாரிக்கு 100 குழந்தைகள் எப்படிப் பிறந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

உயிரணு ஆராய்ச்சி

உயிரணு ஆராய்ச்சி

காந்தாரி 100 குழந்தைகளை பெற்றெடுத்தது எப்படி என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள், இது எப்படி சாத்தியம்? ஒரு பெண்ணுக்கு வாழ்நாளில் 100 குழந்தைகளை பெற்றெடுப்பது சாத்தியமா? 100 கருமுட்டைகள் 100 மண்பானைகளில் வைக்கப்பட்டிருந்ததாக மஹாபாரதத்திலே கூறப்பட்டுள்ளது. அப்போ அவர்கள் சோதனை குழாய் குழந்தைகள் இல்லையா ? இந்த நாட்டில் உயிரணு ஆராய்ச்சி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன என்றார்.

டார்வினின் பரிணாம கோட்பாடு

டார்வினின் பரிணாம கோட்பாடு

மேலும், விஷ்ணுவின் பத்து அவதாரங்களை டார்வினின் பரிணாம கோட்பாட்டுடன் முன்வைத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி இருந்தது.

24 விதமான விமானங்கள்

24 விதமான விமானங்கள்

ராவணனிடம் 24 விதமான விமானங்கள் இருந்தன. அவைகள் பல்வேறு அளவுகள் மற்றும் திறன்களைக் கொண்டிருந்தன. இதற்காக இலங்கையில் பல விமான நிலையங்களைக் கொண்டிருந்தார். மேலும் ராவணன் இந்த விமானங்களை வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தினார்.

இந்தியாவுக்கு புதியதல்ல

இந்தியாவுக்கு புதியதல்ல

ஸ்டெம் செல்கள் மற்றும் சோதனை குழாய் தொழில்நுட்பங்கள் மூலம் கவுரவர்கள் பிறந்தனர். வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளின் அறிவியல் இந்தியாவுக்கு புதியதல்ல, அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது.

எதிர்மாறாக இருக்கிறது

எதிர்மாறாக இருக்கிறது

கடந்த சில ஆண்டுகளில், பழைய நூல்களில் சில கவிதை வசனங்களை மறுபெயரிடுவது, அவர்கள் விரும்பும் விதமான சீரற்ற அர்த்தத்தை திணிக்கும் போக்கு அதிகரித்து உள்ளன. அது, உண்மையான ஆராய்ச்சிக்கு எதிர்மாறாக இருக்கிறது என்று கூறினார்.

English summary
Andhra University Vice Chancellor G Nageshwar Rao said that the Kauravs were test tube babies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X