குளிரில் 44 அப்பாவிகள் பலியானதற்கு ஆளுநர் தான் காரணம்.... - கெஜ்ரிவால் சீற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் 44 பேர் குளிருக்கு பலியானதற்கு துணைநிலை கவர்னர் அனில் பைஜலும், அதிகாரிகளும் தான் காரணம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

கடுமையான குளிர் நிலவி வருகிறதால் வட மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டெல்லியில் 4.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் குறைந்து குளிர்நிலவி வருவதால் வீட்டை விட்டு வெளியேறாத நிலையில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Kejriwal blames Delhi Governor for the cold death in delhi

கடந்த சில தினங்களாக நிலவி வரும் உறை பனியால் விமானம் மற்றும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. குளிர் தாங்காமல் டெல்லியில் பலியானவர்களின் எண்ணிக்கை 44-ஐ தாண்டி நிலையில் இதற்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் தான் காரணம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வீடுகள் இல்லாததால் குளிர் தாங்க முடியாமல் 44 பேர் பலியானதாக மீடியாக்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் வீடு இல்லாதவர்களுக்கு நகர்புற தங்கும் வசதி மேம்பாட்டு வாரியம் மூலம் திட்டம் கொண்டு வரப்பட்டது. எனது தலைமையிலான அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை துணை நிலை கவர்னரால் நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார். இதன் விளைவால் குளிர் தாங்காமல் டெல்லியில் 44 பேர் பலியாகி உள்ளனர்.

பயனற்ற அதிகாரியை கவர்னர் நியமித்து இருந்தார். அதிகாரியை நியமிக்கும்போது ஆளுநர் என்னிடம் ஆலோசனை கேட்க மறுத்து விட்டார். அப்போது எப்படி அரசு நல்ல முறையில் செயல்பட முடியும்.

மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படும் துணைநிலை ஆளுநர்தான் 44 பேர் உயிர் பலிக்கு காரணம் என்றும் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kejriwal blames Delhi Governor for the cold death in delhi. And also he added that urban development officers appointed by LG and they were useless.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற