For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா வெள்ளம்: நகரமயமாக்கலும் முக்கிய காரணம்.. முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டி

கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்திற்கு பருவநிலை மாற்றமும் நகரமயமாக்கலும்தான் காரணம் என்று முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டியளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளா வெள்ளம் : முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டி- வீடியோ

    சென்னை: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்திற்கு பருவநிலை மாற்றமும் நகரமயமாக்கலும்தான் காரணம் என்று முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டியளித்துள்ளார்.

    இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு கேரளாவில் பெரிய மழை பெய்துள்ளது. இதனால் அங்கே பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    Kerala Floods: Urbanization is the reason behind disaster says Former weatherboard director Ramanan

    கேரளா வெள்ளத்திற்கு இதுவரை 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளா வெள்ளம் குறித்து முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டியளித்துள்ளார்.

    அதில், கடைசியாக கேரளாவில் 2013ல் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தது. அப்போது 26 விழுக்காடு அதிகம் பெய்தது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் பெய்வதுதான் தென்மேற்கு பருவமழை ஆகும்.

    ஆனால் இந்த முறை கேரளாவில் தென்மேற்கு பருவமழை 30 விழுக்காடு அதிகம் பெய்துள்ளது. 10 சென்டிமீட்டர் பெய்ய பெய்ய வேண்டிய இடத்தில் 35 சென்டிமீட்டர் பெய்துள்ளது. முக்கியமாக கடந்த 8ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை அதிக மழை பெய்துள்ளது.

    கேரளவில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்தது வெள்ளத்திற்கு ஒரு காரணம் ஆகும். அதேபோல் நகரமாயம்மாக்கள் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.

    இதேபோல் அதிக மழை பெய்தால் மற்ற மாநிலத்திற்கும் வெள்ளம் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 2016ல் சென்னையில் 53 விழுக்காடு அதிகமாக இயல்பைவிட மழை பெய்தது.

    2005ல் 79 விழுக்காடு அதிகம் சென்னையில் இயல்பைவிட மழை பெய்தது. அப்போது அதுதான் வெள்ளத்திற்கு காரணமாகும். ஆனால் கேரளாவில் மழை மட்டுமில்லாமல் நகரம்மயமாக்கலும் பெரிய காரணம் என்றுள்ளார்.

    English summary
    Kerala Floods: Urbanization is the reason behind disaster says Former weather board director Ramanan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X