For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபாஷ் கேரளா.. மாணவிகள் வசதிக்காக பள்ளிகளில் நாப்கின் மெஷின்!

மாணவிகளின் வசதிக்காக கேரளா பள்ளிகளில் சானிடரி நாப்கின் மிஷின் நிறுவ திட்டமிட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மாணவியரின் மாதவிடாய் கால அவசர வசதிக்காக தானியங்கி நாப்கின் மிஷின் பள்ளிகளில் நிறுவ உள்ளது கேரளா அரசு. ஷி பேடு என்ற திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் இந்த மிஷின்களை நிறுவ உள்ளது. இதில் குறைந்த விலையில் நாப்கின்களை பெற்றுக்கொள்ளலாம்.

பள்ளிகளில் நாப்கின் உற்பத்தி மிஷின் நிறுவப்படும் என்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். சில அரசு பள்ளிகளில் தனியார்கள் மூலம் நாப்கின் மிஷின்கள் நிறுவப்பட்டுள்ளன.

Kerala make sanitary pad vending machines mandatory in schools

கிராமத்தில் வாழும் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 6 நாப்கின் கொண்ட ஒரு பை வீதம் 3 பைகள் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்படும். அரசு பள்ளி மாணவிகளுக்கு பள்ளியிலும் இளம்பெண்களுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் வழங்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 6 நாப்பின்கள் கொண்ட 7 பைகள் வழங்கப்படும். பயன்படுத்தப்பட்ட நாப்கினை அந்தந்த கிராம பகுதியில் குழி தோண்டி புதைக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவிகள் பயன்படுத்திய நாப்கினை சுகாதார முறையில் அழிக்க சூளை அடுப்பு நிறுவப்படும் என்று அப்போதய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் கேரளா அரசு தற்போது 'ஷி பேடு' என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் தானியங்கி சானிடரி பேட் மிஷின்களை நிறுவி மாணவிகளக்கு குறைந்த விலையில் சானிடரி பேட்களை அளிக்க உள்ளது.

English summary
In a first of its kind ruling, Kerala government has become the first state in the country to make sanitary pad vending machines mandatory in all higher secondary schools. This will be implemented under the state government's She Pad' scheme which aims to provide sanitary pads to all girl students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X