For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியின் பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியா... இல்லை என்கிறார் ஹர்ஷ் வர்தன்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியின் முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி நிறுத்தப் பட மாட்டார் என கருத்துத் தெரிவித்துள்ளார் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சரான ஹர்ஷ்வர்தன்.

முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியும், அன்னா ஹசாரே இயக்கத்தின் முக்கிய உறுப்பினருமான கிரண்பேடி, சமீபகாலமாக தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார். பாஜகவையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து பாராட்டி வருகிறார் கிரண்பேடி.

Kiran Bedi to be BJP's Delhi CM candidate? Harsh Vardhan says no

‘மோடி இந்த நாட்டை திறம்பட வழிநடத்துவார் என்றார்.இந்த நாடு சுதந்திரம் பெற்ற பின் ஏற்பட்ட நிலைமையை இப்போது மீண்டும் உணர்த்துகிறது. நம்பிக்கை, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, அக்கறை, புத்துயிர், நன்னெறி, தகுதி, திருப்திகரம் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது என தனது டுவிட்டர் பகக்த்தில் எழுதியிருந்தார் கிரண்பேடி.

மேலும், ‘தகுதியின் அடிப்படையில் நான் இந்திய அரசியல் பணியில் சேர விரும்புகிறேன். சில திருப்பங்கள் இதிலும் இருப்பதால் நான் அதனை நோக்கி செல்கிறேன்'' என தனது அரசியல் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுருந்தார்.

எனவே, கிரண்பேடி பாஜகவில் இணையலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல், பேட்டி ஒன்றில் ‘டெல்லியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால், பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா?' எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு, ‘‘அதுபோன்ற எண்ணத்துடன் என்னை அணுகினால் நான் இதுபற்றி ஆலோசிப்பேன்'' எனப் பதிலளித்திருந்தார் கிரண்பேடி.

இந்நிலையில், செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சரான ஹர்ஷ்வர்தன் இத்தகவலை மறுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘டெல்லியின் முதல்வர் வேட்பாளராக ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பெடி களம் இறக்கப்படுவது குறித்து இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான தகவல்கள் தேவையற்றவை. டெல்லியின் முதல்வராக வேண்டும் என்ற கனவில் நான் இல்லை. எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையினை சிறப்பாக செய்ய கவனம் செலுத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலின் போது பாஜக சார்பில் ஹர்ஷ் வர்தன் முதல்வர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, டெல்லி முதல்வர் வேட்பாளராக கிரண்பேடியை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்தால் கட்சியுடன் ஒத்துழைக்க மாட்டோம் என ஹர்ஷ் வர்தன் மற்றும் நிதின் கட்காரி உள்ளிட்ட சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Union Health and Family Welfare Minister, Dr Harsh Vardhan, on Sunday rubbished reports which claimed that former top cop Kiran Bedi will be named BJP's next chief ministerial nominee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X