முத்தப் போராட்ட 'ட்ரெய்லர்': டிவி நிகழ்ச்சியில் இருக்கி அணைச்சு உம்மா கொடுத்த ஜோடி
திருவனந்தபுரம்: முத்த போராட்டம் நடத்தும் சுதந்திர சிந்தனையாளர்கள் அமைப்பு கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சியில் ஜோடி ஒன்று முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள காபி கடை ஒன்றில் ஆண்களும், பெண்களும் கூடி அநாகரீக செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி பாஜகவின் இளைஞர் அணியினர் கடந்த வாரம் அந்த கடையை தாக்கினர். இதை கண்டித்து சுதந்திர சிந்தனையாளர்கள் என்ற ஃபேஸ்புக் ஆர்வலர்கள் அமைப்பு கொச்சி மரைன் டிரைவில் இன்று காதல் முத்தம் என்ற முத்தமிடும் போராட்டத்தை நடத்துகிறது.

இந்நிலையில் சுதந்திர சிந்தனையாளர்கள் அமைப்பும், பாஜக இளைஞர் அணியும் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவாதம் நடத்தினர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் சுதந்திர சிந்தனையாளர்கள் அமைப்பைச் சேர்ந்த தம்பதி ராகுல் பசுபாலன், ரஷ்மியை அனைவர் முன்பும் முத்தமிடுமாறு கூறினார். அவர்களும் உடனே கட்டியணைத்து முத்தமிட்டனர்.
இதை பார்த்த பாஜக இளைஞர் அணியினர் கோபம் அடைந்தனர். இன்று நடக்கும் காதல் முத்த போராட்டத்தில் இளம் ஜோடிகள் கலந்து கொண்டு முத்தமிடுமாறு அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த முத்த போராட்டத்திற்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் காங்கிரஸைச் சேர்ந்த இளம் உறுப்பினர்கள் மற்றும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications