For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"டேபிள் டாப் ரன்வே".. கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான ஓடுபாதை.. பதற வைக்கும் பின்னணி!

கோழிக்கோட்டில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் அந்த விமான நிலையத்தின் வடிவமைப்பும்,அதன் ஓடுபாதை நீளமும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள் .

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: கோழிக்கோட்டில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் அந்த விமான நிலையத்தின் வடிவமைப்பும்,அதன் ஓடுபாதை நீளமும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள் .

Recommended Video

    விபத்திற்கு இதுதான் காரணமா? பின்னணி தகவல்..

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்த விமானம் கோழிக்கோட்டில் இருக்கும் கரிப்பூர் விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளது.

    இந்த விமான விபத்து மாலை 7.40 மணிக்கு நடந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இப்படி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விமானத்தின் பைலட்கள் இருவரும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

    கனமழை.. ரன்வேயில் வழுக்கி.. நிலைதடுமாறி இரண்டாக உடைந்த விமானம்.. கோழிக்கோட்டில் என்ன நடந்தது? கனமழை.. ரன்வேயில் வழுக்கி.. நிலைதடுமாறி இரண்டாக உடைந்த விமானம்.. கோழிக்கோட்டில் என்ன நடந்தது?

    மோசமான தகவல்

    மோசமான தகவல்

    இந்த விமானத்தில் 184 பேர் இருந்துள்ளனர். இவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இந்த விமான விபத்திற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது . ஒன்று மோசமான வானிலை. மழை காரணமாக விமான ஓடுபாதை வழுக்கி இருக்கிறது. இதனால் விமானம் நிலைதடுமாறி ஓடுபாதையில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதனால் விமானம் பிளந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

    காரணம் 2

    காரணம் 2

    இந்த விபத்துக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதன்படி, இந்த கோழிக்கோடு விமான நிலையம் மலை மீது அமைந்து இருக்கும் விமான நிலையம் ஆகும். கேரளாவில் இருக்கும் ஒரே Tabletop runway கொண்ட விமானம் நிலையம் இது ஆகும். டேபிள் டாப் ரன்வே என்பது மலை மீது அமைக்கப்பட்டு இருக்கும் , அல்லது உயரமான இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஓடுபாதை கொண்ட விமான நிலையம் ஆகும்.

    வாய்ப்பு உள்ளது

    வாய்ப்பு உள்ளது

    உயரமான குன்று மீது விமான நிலையம் இருப்பதால், இங்கு விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. கேரளாவில் இருக்கும் ஒரே டேபிள் டாப் ரன்வே விமான நிலையம் கோழிக்கோடுதான். இந்த விமான நிலையத்தின் டேபிள் டாப் ரன்வே நீளம் வெறும் 2850 மீட்டர்தான். பொதுவாக 3150 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறைவாக இருந்தால் அந்த விமான ஓடுபதையில் விமானத்தை இறக்குவது மிகவும் கடினம்.

    மிக கடினம்

    மிக கடினம்

    அந்த ஓடுபாதையில் பெரிய விமானங்களை இயக்குவது மிக மிக கடினம் ஆகும். இந்த நிலையில் கோழிக்கோடு விமான ஓடுபாதை நீளம் குறைவாக இருக்கிறது என்று ஏற்கனவே புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 385 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் அதற்கு இந்த பகுதி மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

    1500 குடும்பம்

    1500 குடும்பம்

    அந்த ரன் வே அருகே 1500 குடும்பங்கள் வசிக்கிறது. இந்த குடும்பங்கள் தங்கள் நிலத்தை கொடுக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் விமான நிலைய ஊடுபாதையை விரிவாக்க முடியவில்லை. இப்படி சின்ன ஓடுபாதை கொண்டு இருந்ததும் கூட விபத்துக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

    English summary
    Kozhikode Air India flight accident: How table top runway becomes a reason for the disaster today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X