லாலுவின் டெல்லி ஆபிஸ் வாடகை 15 வருஷமா “333 ரூபாய்” – இந்த லட்சணத்தில் ஆபிஸ் பேர் “ராப்ரி” யாம்!
டெல்லி: டெல்லியில் லாலு பிரசாத் யாதவின் கட்சி அலுவலகம் வெறும் ரூபாய் 333 வாடகையில் இயங்குகின்றது என்ற செய்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி அலுவலகம் டெல்லியில் உள்ள வி.பி ஹவுஸ் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடத்திற்கான வாடகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் என்பவர் கேட்டிருந்தார்.

இதற்கு ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதில் அளித்து உள்ளது. அதில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து வி.பி ஹவுஸ் கட்டிடத்தில் ராஷ்டிரீய ஜனதா தள அலுவலகம் இயங்கி வருகிறது.
2 அறைகள் கொண்ட இந்த அலுவலகத்துக்கான மாதவாடகை வெறும் ரூபாய் 333 மட்டுமே செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
மிகக் குறைந்த இந்த வாடகையை 15 ஆண்டுகளாக அந்த கட்சி மத்திய அரசின் நகர்ப்புற அபிவிருத்தித் துறைக்கு வழங்கி வருகிறது. இந்த சூட் அறை ஒன்றில் குறைந்தபட்சம் 15 பேர் தங்கலாம்.
இந்த அறைகளுக்கு அருகிலேயே ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி கடந்த 2008 ஆம் ஆண்டு டெல்லியில் ராப்ரி பவன் என்ற பெயரில் 3 மாடி கொண்ட தலைமையகத்தை கட்டியபோதும் தொடர்ந்து இந்த வி.பி.ஹவுஸ் கட்டிட அலுவலகத்தையே பயன்படுத்தி வருகிறது. பல முறை நோட்டீஸ் கொடுத்தும் காலி செய்ய லாலு மறுக்கிறார்.
குறைந்த விலைக்கு அரசு வழங்கிய நிலத்தில் கட்டப்பட்ட லாலு கட்சி தலைமை அலுவலகத்திற்கு லாலு பிரசாத் தன் மனைவி ரப்ரி பெயரை வைத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications