வக்கீல் கொலை வழக்கு..ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி மகள் கைது - சிபிஐ அதிரடி
கொலை வழக்கில் ஹிமாச்சல் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிம்லா: துப்பாக்கிச்சுடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரதீப் சிங் கொலை வழக்கில் ஹிமாச்சலப்பிரதேச ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி சபினா சிங்கின் மகள் கல்யாணி சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது.
Recommended Video
தேசிய துப்பாக்கிச்சுடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரீத் சிங் 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். சண்டிகர், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வசித்து வந்த தேசிய துப்பாக்கிச்சுடுதல் வீரர் சுக்மன்பிரதீப் சிங். 35 வயதான சுக்மன் வழக்கறிஞராகவும் பணியாற்றிவந்தார். இவரது தந்தையான எஸ்எஸ் சிந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா ஹைகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

இதனிடையே, சுக்மன் கடந்த 2015 செப்டம்பர் 15-ம் தேதி சண்டிகரில் உள்ள ஒரு பூங்காவில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுக்மனை சுட்டுக்கொன்றது யார்? என போலீசார் விசாரித்துவந்தனர். ஆனால், இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு 2016ஆம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் எதேனும் தகவல் கொடுப்பவர்களுக்கு 5 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சம்மானத்தொகை கடந்த ஆண்டு 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கிச்சுடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரதீப் சிங் கொலை வழக்கில் முதல் நபரை சிபிஐ நேற்று கைது செய்துள்ளது.
ஹிமாச்சலப்பிரதேச ஹைகோர்ட் தலைமை நீதிபதி சபினா சிங்கின் மகள் கல்யாணி சிங்கை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சுக்மன் பிரதீப் கொலை வழக்கில் கல்யாணி சிங்கிற்கு தொடர்பு உள்ளதா? என நீண்டநாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது, இந்த கொலை வழக்கில் கல்யாணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ நடத்திய விசாரணையில் சித்துவும் கல்யாணி சிங் என்பவரும் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராகமல் கல்யாணி சிங் தப்ப முயற்சித்தார். சிபிஐ அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் சித்து கொல்லப்பட்டபோது அவரை துப்பாக்கியால் சுட்ட நபருடன் கல்யாணி சிங் உடன் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, சபீனா சிங்கின் மகள் கல்யாணி சிங்கை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு அவரை சண்டிகரில் உள்ள சிறப்பு நீதிமன்ற கூடுதல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, 4 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சுக்மன் பிரதீப்பிற்கும் கல்யாணி சிங்கும் இடையே பழக்கம் இருந்துள்ளதாகவும், ஆனால் பிரச்சினை காரணமாக இந்த உறவில் ஏற்பட்ட விரிசலே சுக்மன் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சுக்மன் கொல்லப்பட்டபோது அவரை துப்பாக்கியால் சுட்ட நபருடன் கல்யாணி சிங் உடன் இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரர் சுக்மன் சிங் கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பின் முதல் கைது நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications