For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சிங்கம் களம் இறங்கிருச்சு.." உற்சகமாக கோஷமிட்ட இமாச்சல் மக்கள்.. ஒரு நிமிடம் ஸ்டன் ஆன பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

தர்மசாலா: ஹிமாச்சல பிரதேசம் சென்று பிரதமர் நரேந்திர மோடி அங்கு நாட்டின் நான்காவது வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் இப்போது ஜெய்ராம் தாகூர் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கு பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

அதிரடி..கோவை பாஜக அலுவலக பெட்ரோல் குண்டு வீச்சு.. கைதானவர்கள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம் அதிரடி..கோவை பாஜக அலுவலக பெட்ரோல் குண்டு வீச்சு.. கைதானவர்கள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்

 ஹிமாச்சல பிரதேசம்

ஹிமாச்சல பிரதேசம்

இதற்கிடையே இன்று ஹிமாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பா நாட்டின் நான்காவது வந்தே பாரத் அதிவேக ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர், அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் உடன் இருந்தனர்.

 வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்


இந்த ரயில் இமாச்சலப் பிரதேசத்தின் அம்ப் ஆண்டௌரா முதல் டெல்லி வரை இயங்க உள்ளது. இந்த புதிய ரயில் முந்தைய ரயில்களுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட ஒன்றாக இருக்கும் என்றும் இது சில நொடிகளில் அதிக வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது வெறும் 52 நொடிகளில் இந்த ரயில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக இருக்கும்.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

புதன் தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் இந்த ரயில், முக்கிய நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்ல உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,"இமாச்சல பிரதேசத்திற்கு தீபாவளி முன்கூட்டியே வந்துவிட்டது.. புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இது நாட்டில் அறிமுகம் செய்யப்படும் 4வது வந்தே பாரத் ரயில் ஆகும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

 சிங்கம்

சிங்கம்

இந்த நிகழ்ச்சிக்காக இமாச்சலப் பிரதேசத்தின் உனாவுக்கு சென்ற உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் உனா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தவுடன் அவரை பார்த்து மக்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், "சிங்கம் வந்துவிட்டது" என்றும் "பாருங்கள், பாருங்கள் யார் வருவது என்று சிங்கம் வந்துவிட்டது" என்றும் பிரதமர் மோடி வந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.

 ஆய்வு

ஆய்வு

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அங்கு கூடி இருந்த மக்களைப் பார்த்து மக்கள் உற்சாகமாகக் கையசைப்பதும், அவர்கள் உற்சாகமாகக் கோஷமிடுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. மேலும், பிரதமர் மோடி சிறிது நேரம் அந்த ரயிலிலும் பயணித்தார். இது மட்டுமின்றி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்ஜின் கட்டுப்பாட்டு மையத்தையும் பிரதமர் ஆய்வு செய்தார்.

 தேர்தல்

தேர்தல்

மொத்தம் 68 இடங்களைக் கொண்டு ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 44 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 21 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பெரும்பாலான இடங்களில் பாஜக பெரிய வெற்றியைப் பெற்று இருந்தது. இப்போது மீண்டும் அதேபோன்ற வெற்றியைப் பெறவே பாஜக முயன்று வருகிறது.

English summary
Prime Minister Narendra Modi got huge welcome in Himachal Pradesh: Prime Minister Narendra Modi flagged off India's fourth Vande Bharat Express train from Himachal Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X