இது தப்பாச்சே... சென்சார் போர்டை நெளிய வைத்த "காலண்டர் கேர்ள்ஸ்"!
மும்பை: இயக்குநர் மதுர் பண்டர்கர் இயக்கியுள்ள காலண்டர் கேர்ள்ஸ் படம் ஏற்கனவே பரபரப்பு அலையைப் பரப்பி வரும் நிலையில் சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தின் டிரெய்லரைப் பார்த்து அதிர்ந்து போய், கையில் கத்திரிக்கோலைத் தூக்கி விட்டனராம்.
காரணம், படத்தின் டிரெய்லரில் இருந்த நிர்வாணக் காட்சிதானாம். எவ்வளவு தைரியமாக டிரெய்லரிலேயே நிர்வாணக் காட்சியை வைப்பீர்கள் என்று ஒரு போர்டு உறுப்பினர் பண்டர்கரிடமே கேட்டு விட்டாராம்.

இப்போது டிரெய்லரில் மட்டுமல்லாமல் படத்திலிருந்தும் அந்த நிர்வாணக் காட்சிக்கு கட் கொடுக்கப்பட்டு விட்டதாம்.
ஐந்து அழகிய இளம் மாடல் அழகிகள் குறித்த கதைதான் இந்த காலண்டர் கேர்ள்ஸ் படம். இவர்கள் எப்படி மாடல் அழகிகளாக மாறுகிறார்கள், அதில் இவர்கள் சந்திக்கும் சவால்கள், இவர்களுக்கு முன்பு பரந்து விரிந்து காணப்படும் தவறான பாதை. அதில் சிக்கி சிதைகிறார்களா அல்லது வெல்கிறார்களா என்பதுதான் கதையாம்.
படம் முழுக்க பளபளவென்று அழகிகள் கூட்டத்தையும், கவர்ச்சியையும் மதுர் பண்டர்கர் வாரி இறைத்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் முதல் போஸ்டரே பிரளயத்தைக் கிளப்பியிருந்தது. இிந்த நிலையில் சென்சாருக்காக டிரெய்லரை அனுப்பி வைத்து சென்சார் போர்டையே பதற வைத்து விட்டார் பண்டர்கர்.

அதில் ஒரு நிர்வாணக் காட்சி இடம் பெற்றிருந்ததைப் பார்த்து போர்டு உறுப்பினர்கள் அதிர்ந்து போய் அதை கட் செய்யச் சொல்லி விட்டனராம். படத்திலிருந்தும் அதைத் தூக்கச் சொல்லி விட்டனராம்.
இப்படத்தில் அகன்ஷா பூரி, அவனி மோடி, கைரா தத், ரூஹி சிங், சதர்புரா பைன் ஆகிய அழகிகள் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications