"பாஜகவில் சேர்ந்தா தப்பிச்சீங்க.. இல்லனா புல்டோசர்தான்" - காங்கிரசை ஓப்பனாக மிரட்டிய பாஜக அமைச்சர்
போபால்: பாஜகவில் விரைவில் இணைந்துவிடுமாறும், இல்லையென்றால் ஒவ்வொரு காங்கிரசார் வீட்டிற்கும் புல்டோசர் வரும் எனவும் மத்தியப் பிரதேசத்தில் அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக மிரட்டும் வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரின் இந்த பேச்சுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அமைச்சரின் பேச்சு மூலம் பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இத்தனை கண்டனங்கள் வந்துள்ள போதிலும், "நான் என்ன தவறாகப் பேசிவிட்டேன்" என அந்த அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.

'புல்டோசர்' அரசியல்
உத்தரபிரதேசத்தில் கொலை செய்வது, சிறுமிகளைப் பலாத்காரம் செய்வது போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடுவோரின் வீடுகளை புல்டோசரால் இடித்து தள்ளும் நடவடிக்கையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், மறுபுறம் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் எதிர்க்கட்சியினர் மீது இந்த புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த புல்டோசர் அரசியல், உத்தரப்பிரதேசத்தில் இருந்து பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.

மிரட்டிய அமைச்சர்
அந்த வகையில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்திலும் இவ்வாறு புல்டோசர்களை கொண்டு குற்றவாளிகளின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இதனை முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் பல இடங்களில் பெருமையாகவும் கூறி வருகிறார். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில பஞ்சாயத்துத் துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா கலந்துகொண்டு பேசினார்.

"புல்டோசர் வரும்"
அவர் பேசுகையில், "மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஆனாலும், காங்கிரஸார் சிலர் மெத்தனப்போக்கில் இருக்கிறார்கள். எப்படியும் இந்த தேர்தலிலும் பாஜகதான் வெற்றி பெறப் போகிறது. இது காங்கிரஸாருக்கும் நன்றாகத் தெரியும். அவர்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பு தருகிறோம். பாஜகவுடன் மெல்ல இணைந்துவிடுங்கள். இல்லையெனில், அடுத்து அமையும் பாஜக ஆட்சியில் ஒவ்வொரு காங்கிரஸாரின் வீட்டுக்கு புல்டோசர் வரும்" என்றார்.

"என்ன தவறாகக் கூறிவிட்டேன்?"
அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியாவின் இந்த மிரட்டல் பேச்சுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. எனினும், தான் எதுவும் தவறாகப் பேசவில்லை என மகேந்திர சிங் சிசோடியா கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் என்ன தவறாகக் கூறிவிட்டேன்.. மற்ற கட்சியினரை எங்கள் கட்சியில் இணையும்படி கூறுவது தவறா? எல்லா இடத்திலும் தவறு செய்கிறவர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸிலும் அதுபோன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்குத்தான் புல்டோசர் வரும் என்று நான் கூறினேன். குற்றம் உள்ள நெஞ்சம்தான் குறுகுறுக்கும் என்பார்கள். காங்கிரசார் தற்போது பேசுவதை பார்த்தால் அப்படிதான் இருக்கிறது" என்றார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications